பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 14

என்பது அனைத்து மக்களின் குறிக்கோளாக அமைய வேண்டும். தேச முன்னேற்றத்திற்கு கல்வி, தொழில் துறைகளில் முன்னேற்றம் காண்பது என்பது முதல் கடமையாகிறது. கல்வி என்பது தேசீயக் கல்வியாக இருக்க வேண்டும். தொழில் என்பது விவசாயம், கால்நடை பராமரிப்பு உள்பட சகல தொழில்களும் அடங்கும். முதல் நிலை உற்பத்தி, மறு உற்பத்தி ஆகியவை அதிகரித்து நாட்டின் செல்வத்தைப் பெருக்கும் அனைத்துத் தொழில்களும் இதில் சேரும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் அடிப்படையாக உள்ளது அதன் கல்வியும் செல்வமும் ஆகும் என்று பாரதி தனது கட்டுரைகளில் வலியுறுத்திக் கூறுகிறார்.

பாரதி பலவேறு தலைப்புகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். அவைகளில் தனது கொள்கை நிலைபாடுகளையும் அடிப்படையான அரசியல் சமுதாயக் கருத்துக்களையும் வெளிப்படுத்தியுள்ளார். அவைகளில் அக்கால நடப்பு அரசியல் பொருளாதாரம், சமுதாயப் பிரச்னைகள் தொடர்பான பல கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார். அரசியலில் நாட்டு விடுதலையும், நாட்டு ஒற்றுமையும், நாட்டு முன்னேற்றமும் நமது லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்பது பாரதியின் கொள்கை நிலைபாடாகும்.

அதே சமயத்தில் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதிக்கும் பலவேறு பிரச்னைகளைப் பற்றியும் பாரதி எழுதியுள்ளார். உடனடிப் பிரச்னைகளையும் அதே சமயத்தில் நீண்ட காலப் பிரச்னைகளையும் பாரதி தனது கட்டுரைகளில் விவாதித்துள்ளார். அவர் தொடாத பிரச்னை இல்லை.

நாட்டு விடுதலைக்காகத் தலைவர்கள் ஒன்று கூடி, கூட்டங்கள், சபைகள், மகாநாடுகள், நடத்தித் தீர்மானங்கள் போடுவதுடன், பல்லாயிரக் கணக்கான, பல லட்சக்கணக்கான மக்களையும் உணர்வு

பூர்வமாகத் திரட்ட வேண்டும் என்று பாரதி எழுதுகிறார். ஹிந்து