பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTT L LLL TTS LLL TT L TTTT LLLLLLTTTTLLLLSSK SLLLLLLLLS 13

சமுதாயத்தில் பெளத்த, சமண சமயங்களின் மிகப் பெரிய தாக்கங்கள், முக்கியமாக சர்வ ஜன சமத்துவம், ஜீவ காருண்யம் பற்றிய கொள்கைகளின் செல்வாக்கு, துறவு நிலையும் அவற்றின் செல்வாக்கும் பங்கும் விளைவுகளும் நாட்டில் நிகழ்ந்த கூடித்திரிய நாசம், புலவர்களுக்கும் அறிஞர்களுக்கும், ஞானிகளுக்கும் எடுக்கவேண்டிய விழாக்கள் பற்றிக் குறிப்பாகத் தமிழ் நாட்டில் சங்க காலப்புலவர்கள், ஒளவை, கம்பன், வள்ளுவர், இளங்கோவடிகள், இடைக்கால, தற்காலப் புலவர்கள் சான்றோர்கள், விஞ்ஞானிகள் முதலியவர்களுக்கு ஜன்ம விழாக்கள், பாராட்டு விழாக்கள் எடுக்க வேண்டிய அவசியம், தமிழ் இசை அதன் சிறப்பு, அதன் பெருமை, அதை மேம்படுத்த வேண்டிய அவசியம், பெண்கள் விடுதலை, ஆண் பெண் சமத்துவம் பற்றி அவருடைய தெளிவான கருத்துக்கள், சாதிக் கொடுமைகள், பாகுபாடுகள், வேறுபாடுகளை சமுதாயத் -திலிருந்து நீக்க வேண்டும் என்பது பற்றியும், இந்துக்களின் ஒற்றுமைபற்றி அவருடைய உறுதியான கொள்கை நிலைபாடு, தேசியக் கல்வி பற்றி அவருடைய கருத்துக்கள், இவையெல்லாம் நாம் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு செயல்படுத்த வேண்டியவைகளாகும்.

தேச விடுதலை பற்றி பாரதியின் கருத்துக்களும் நிலைபாடும் முன்பின் முரணில்லாதவை. புரட்சிகர ஜன நாயகத் தன்மையும் நெடிது நோக்கும் கொண்டவை. முதலில் பாரத தேசம் அன்னிய ஆட்சியிலிருந்து முழுமையாக விடுதலை பெற வேண்டும். ஆட்சி முறை முழுமையான மக்களாட்சி முறையாக இருக்க வேண்டும். சமுதாயத்தின் சகல பணிகளிலும் மக்கள் அனைவரும் மேலும் மேலும் அதிகமாக பங்கு கொள்ளும்படியாக இருக்க வேண்டும். சாதி வேறுபாடுகள் பாகுபாடுகள், கொடுமைகள் நீங்கி மக்கள் அனைவரின் சமத்துவமும் ஒற்றுமையும் மேலும் மேலும் அதிகப்பட வேண்டும். விடுதலைபெற்ற பாரதத்தில் சமுதாய முன்னேற்றம்