பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2உமதிப்படஇந்துக்குளின்டமதிப்பம்-மரியாதையும் 185

இரண்டாவது, அன்னிய தேசப் பண்டிதர் சரித்திரக்காரர் முதலானவர்கள் ஹிந்துக்களை அன்னிய தேசத்தார், போர் செய்தும் தந்திரத்தாலும் வென்று ஹிந்துக்களின் மீது அன்னிய ராஜ்யம் நடை பெற்று வருவதையொட்டி வெளி தேசத்து சரித்திரக்காரர் நமது நாட்டு வீரம் ஒற்றுமை, முதலிய குணங்களையும் நமது பொது அறிவையும் மிகவும் இழிந்த நிலைமையிலே இருப்பதாகக் காட்டுதல் வழக்கமாய் நடைபெற்று வந்திருக்கிறது.

“நம்மை உலகத்தார் முன்னே சிறுமைப் படுத்தி மதிப்பில்லாமல் செய்து விட்ட புறக்கருவிகள் பல. அவற்றை விரிவாக எழுத வேண்டுமானால் தனிப் புஸ்தகம் போட வேண்டும்” என்று பாரதியார் எழுதுகிறார். மேலும் அவர் எழுதுகிறார்.

போனது போகட்டும். இனி மேலாயினும் புத்தியாய் பிழை மனமே" என்று ஒரு பண்டாரப் பாட்டு உண்டு. அதுபோல நடந்த தெல்லாம் நடந்து போய் விட்டது. சிறுமைப் படுவதெல்லாம் பட்டாய் விட்டது. இனிமேலாயினும் ஹிந்துக்கள் தம்மை மதிப்புடையோராகச் செய்து கொள்ள வழி தேட வேண்டும். வெளி தேசங்களில் நமக்கு மதிப்பு உண்டாக்க வேண்டுமானால், அதற்கு மூலம் இங்கே வலிமை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இங்ங்ணம் வலிமை சேர்ப்பதற்குக் கூட்டம் ஒன்றே உபாயம் என்பதை இந்த வியாசத்தின் தொடக்கத்தில் சொன்னோம்.

நம்முடைய ராஜரிக நிலைமையைச் சிர்திருத்துவதற்குப் பல முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்த முயற்சிகள் மேம்மேலும் வளர்ந்து வெற்றி பெறவேண்டுமானால் அதற்குக் கூட்டங்களை அதிகப் படுத்துவதே வழி. கூட்டங்கள் கூடி யோசனை பண்ணுகிற விஷயம் கை கூடும். ஓயாமல் கூட்டங்கள் சேர்ந்து திரும்பத் திரும்ப உறுதி செய்யப் படும் தீர்மானம் நிச்சயமாகக் கைகூடும். நமது ராஜாங்கக் கூட்டங்களில் இதுவரை சரியானபடி சக்தி ஏற்படாத