பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின்-உரைநடையில்-அரசியல் Тоффлё S gegrupés. Széisst-se. சீனிவாசன் 187

காரணம் யாதெனில் இந்தக் கூட்டங்களில் உண்மையாகவே தேசத்துக்கு அனுகூலம் செய்ய வேண்டும் என்ற கருத்துடையவர்கள் மிகச் சிலராகவே இருந்தனர். தேச பாஷைகளிலே பேசுவது கிடையாது. அதாவது பொய் அதிகப்பட்டு தலை தூக்கி நின்றது. இப்போது நாட்டில் உண்மையான தேசாபிமானிகள் தொகை அதிகப் பட்டிருக்கிறது. தேச பாஷைப் பேச்சு வழக்கப் பட்டு வருகிறது. ராஜ்ய விஷயங்களுக்கு மாத்திரம் நான் பேசவில்லை. நான் பொதுப் படையாகப் சொல்லுகிறேன். எவ்விதமான வலிமைக்கும் கூட்டம் ஆதாரம். சபை சேர்ந்து பேசினால் மாத்திரம் போதாது. எப்போதுமே எங்கும் நாம் ஒவ்வொருவரும் நாம் இன்ன பெருங் கூட்டத்தைச் சேர்ந்திருக்கிறோம் என்பதையும் நமது வாழ்க்கையின் நோக்கம் இன்னதென்பதையும் மறவாதிருக்க வழி தேட வேண்டும்.

"இங்கிலாந்து, பிரான்ஸ், முதலிய ஐரோப்பிய தேசங்களில் கோடானு கோடியாக மனிதரைத் திரட்டிச் சண்டைக்கு உபயோகப் படுத்துகிறார்கள். ஒரு தேசம் முழுதுமே ஒரு சைன்யம் போல் ஆகும் படி செய்ய வேண்டும் என்று அங்குள்ள சில தலைவர்கள் நினைக்கிறார்கள். நான் சண்டைக்காரனில்லை. சமாதானக்காரன். இருபது கோடி ஹறிந்துக்களையும் ஒரே கூட்டமாகச் செய்து, சண்டைக்கன்று சமாதானமாக மனிதன் சாதனை செய்யக் கூடிய நல்ல பயன்களை நிறைவேற்றும் பொருட்டாக உபயோகப்படுத்த வேண்டுமென்பது என்னுடைய நோக்கம்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மற்ற ஹிந்துக்களின் உதவி வேண்டும். தெய்வ பலம் வேண்டும். இவ்விரண்டும் கை கூடும்” என்று பாரதியார் எழுதுகிறார்.

நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில் ஏற்பட்ட அவமானங்களைப் பற்றி பாரதி மனம் நொந்து எழுதுகிறார். எனவே நாடு விடுதலை