பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் SCPSTuS SCHégossi-o. சீனிவாசன் 191

கொண்டு அன்னிய தேசங்களைப் பார்த்து விட்டு வாருங்கள். நமது தொழில்களுக்கும் கலைகளுக்கும் வெளிநாடுகளில் எராளமான உதவி கிடைக்கும். சந்தேகப் பட வேண்டாம் என்று பாரதி எழுதுகிறார்.

மேலும், சங்கீத ஞானமுடைய தமிழ்ப் பிள்ளைகள், முதலாவது கொஞ்சம் இங்கிலிஷ் கற்றுக் கொண்டு பிறகு ஐரோப்பிய சங்கீதத்தின் மூலாதாரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது மிகவும் சலபமான காளியம். தமிழருடைய அறிவுக்கு எந்த வித்தையும் சுலபம். இந்தத் தேர்ச்சி கொஞ்சமிருந்தால் பிறகு நமது சங்கீதத்தை ஐரோப்பியர் அனுபவிக்கும் படி செய்தல் எளிதாகும். அப்பால் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் போய் நமது சங்கீதத்தின் உயர்வை அவர்களுக்குக் காட்டினால் மிகுந்த கீர்த்தியும் செல்வமும் பெறலாம். -

எவ்விதமான யோசனை, எவ்விதமான தொழில், எவ்விதமான ஆசை, எதையும் கொண்டு பிற தேசங்களுக்குப் போக வேண்டும். ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவுக்கும் யாத்திரை செய்யப் போதுமான திரவியம் இல்லாதவர்கள், ஜப்பானுக்குப் போகலாம். வெளியுலகம் நம்மை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறது. நமது வரவுக்குக் காத்திருக்கிறது. நமது மேன்மைக்கு வசப்பட ஆவல் கொண்டிருக்கிறது. வெளியுலகத்தில் நாம் சென்று மேம்பாடு பெற்றாலொழிய இங்கே நமக்கு மேன்மை பிறக்க வழியில்லை. ஆதலால் தமிழ்ப் பிள்ளைகளே! வெளி நாடுகளுக்குப் போய் உங்களுடைய அறிவுச் சிறப்பினாலும் மன உறுதியினாலும் பலவிதமான உயர்வுகள் பெற்றுப் புகழுடனும் செல்வத்துடனும், வீரியத்துடனும், ஒளியுடனும் திரும்பி வாருங்கள். உங்களுக்கு மகாசக்தி துணை செய்க” என்று மகாகவி அற்புதமாக எழுதுகிறார்.