பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. வருங்காலம் 192

பாரதி எண்பது - தொண்ணுறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கருத்துக்கள், தமிழக இளைஞர்களுக்கு அவர் கூறிய அறிவுரைகள் இன்றும் பொருத்தமாக இருக்கிறது,. இன்று லட்சக்கணக்கான நமது இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழில் நுட்ப நிபுணர்கள், தொழில் தேர்ச்சி பெற்ற பணியாளர்கள், வணிகர்கள், வியாபாரிகள், டாக்டர்கள், நர்ஸுகள், என்ஜினியர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கணக்கியல் நிபுணர்கள், மற்றும் பல்வேறு துறை வல்லுனர்கள் பலரும் வெளி நாடுகளுக்குச் சென்று பணியாற்றுகிறார்கள். குறிப்பாக அராபிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளுக்குச் சென்று பணியாற்றி வருகிறார்கள். அநேகமாக இந்திய நிபுணர்கள் வேலை செய்யாத நாடு எதுவும் உலகில் இல்லை. நமது ஆசிரியர்கள் பேராசியர்கள் பணியாற்றாத பல்கலைக் கழகங்கள் உலகில் எதுவு -மில்லை. பங்கேற்காத திட்டப் பணிகள் வளர்ச்சிப் பணிகள் எதுவு -மில்லை. இந்தியாவிலும் தமிழ் நாட்டைச் சேர்ந்த நிபுணர்கள், வல்லுனர்கள் இல்லாத மாநிலம் இல்லை, நகரங்கள் இல்லை. பல்கலைக் கழகங்கள் நிர்வாக அமைப்புகள் இல்லை. அங்கு பணம் சம்பாதித்து தாய் நாட்டிற்குத் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். #!

கேரளாவிலிருந்து அராபிய நாடுகளுக்குச் சென்று அங்கு உழைத்துச் சம்பாதித்து மணியாடர் மூலம் அனுப்பும் பணம் கேரளத்தின் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான பிரிவாகி விட்டது. அதற்கு மணியாடர் பொருளியல் என்று பெயர் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கேரள மாநிலம் ஒரு நல்ல நுகர்பொருள் சந்தையாக ஆகியிருக்கிறது.

சுமார் இருநூறு முன்னுறு ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பல நாடுகளுக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கும் கரும்புத்