பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTTTT LLLLL TCLLy MMMMS LLLLLLTTLLLLSK SS LLLLLS 15

தர்மத்தை, ஹிந்து நாகரிகத்தை, ஹிந்து கலாச்சாரத்தை நிலை நிறுத்துவதற்காக நமது சமுதாயம் நடைமுறையில் ஏற் படுத்தி -யிருக்கும் கோவில் திருவிழாக்களில் பல்லாயிரக் கணக்கில் பல லட்சக் கணக்கில் நாட்டு மக்கள் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் குடும்பம் குடும்பமாய் திரளுவதைப் போல, நாட்டு விடுதலைக்காகவும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும், சாதி மத இன மொழி வெறுபாடுகளின்றி ஒன்று திரள வேண்டும் என்பதும், ஒன்று திரட்டப் பட வேண்டும் என்பதும் பாரதியின் கருத்தாக இருந்திருக்கிறது.

தேச விடுதலை தேச முன்னேற்றம் என்பது நாட்டின், நாட்டு மக்களின் சுதந்திரமும், கல்வியும், கல்வி அறிவும், செல்வச் செழிப்பும் மேம்பட வேண்டும் என்பதில் கோடிக்கணக் கான பாரத மக்களின் உணர்வு பூர்வமான செயல்பாடுகள் அதிகரிக்க வேண்டும் என்பதாகும். வெறும் பேச்சோடு இல்லாமல் செயல்பாடுகளிலும் பங்கு கொள்ள வேண்டும் என்பது பாரதியின் விருப்பமாக, கருத்தாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகத் தென்படுகிறது. இதை நிறைவேற்ற நமது மக்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட செயல்பாடும் அவசியமாகும்.

இந்தப் பிரச்னையில் நான் நேரில் கண்ட மூன்று நிகழ்ச்சிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவைகள் சிறந்த முன்னு -தாரணங்களாகும்.

1. மதுரை மாநகரில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் ஒரு பெரிய திருவிழா நடைபெறுகிறது. அதற்குத் சித்திரைத் திருவிழா என்று மக்கள் குறிப்பிடுவார்கள். இந்தத் திருவிழாவில் அருள்மிகு அன்னை மீனாட்சி திருக்கல்யாண விழாவும், அழகர் ஆற்றில் இறங்கும் விழாவும் முக்கிய தெய்வீக நிகழ்ச்சிகளாகும்.