பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. Ognislavnemi T95

“சர்வ ஜனக்கல்வியை நமது நாட்டில் நிறைவேற்றிட வேண்டும் என்று பல புண்ணியவான்கள் பெரு முயற்சி செய்து வருகிறார்கள். இங்ங்ணம் எல்லா வகுப்புகளையும் சேர்ந்த எல்லா மனிதரிடையேயும் கல்வியும், அதன் விளைவுகளாகி பல்வகைப் பட்ட அறிவுப் பயிற்சிகளும் பரவி விடுமானால் அதனின்றும் கைத் தொழிலாளர்கள் கல்விப் பயனைக் காவியங்கள் இயற்றுவதிலும் படிப்பதிலும் மாத்திரமே, செலவிடும் வழக்கம் மாறிப் போய் அவரவர் தத்தமக்கு உரிய தொழில்களிலும் கல்வியறிவைப் பயன் படுத்தத் தொடங்குவார்கள். இதனின்றும் இதுவரை உலகத்தில் கைத் தொழிலாளர் பரம ஏழைகளாக இருந்து வரும் நிலைமை நீங்கி மேல் மேலும் கைத் தொழிலாளருக்குள்ளே செல்வம் வளர்ச்சி பெற்று வர ஹேது உண்டாகும்.

அறிவே வலிமை. கல்வியே செல்வத்தின் தாய். சரஸ்வதியும், லக்ஷமியும் மாமியும் மருமகளும் போல்வர் என்றும் கல்வியுள்ள இடத்தில் செல்வமும், செல்வம் உள்ள இடத்தில் கல்வியும் ஏற்படுதல் மிகவும் அரிது என்றும் நமது நாட்டில் பரம மூடத்தனமான கொள்கையொன்று பரவி நிற்கிறது. வெறுமே வர்ணனைகளும் கற்பனைகளும் சமைத்து யாருக்கும் எளிதில் புலப்படாத வலிய நடையில் காவியங்கள் எழுதுவதிலே படித்த படிப்பையெல்லாம் செலவிடுவோருக்கு அதிக செல்வம் சேர மார்க்கமில்லை என்பது பிரத்யகூடிம். இந்த அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டே மேற்படி கொள்கை ஆதி காலத்தில் உற்பத்தியாயிற்று. ஆனால் அது இக்காலத்திற்குப் பொருந்தாது. காவியங்களைக் கூட எளிய நடையில் எழுதினால் அச்சுத் தொழிலும் பொது ஜனக் கல்வியும் பரவி வரும் இக்காலத்தில் ஆசிரியர்களுக்கு ஏராளமான லாபம் கிடைக்கும். காவியங்கள் எழுதுவதற்கு மாத்திரம் என்று படிக்காமல் பலவகை வியாபாரங்களுக்கும் தொழில்களுக்கும் வேண்டிய படிப்புகள் படித்து அவற்றை ஊக்கத்துடன் கையாளுவோருக்கு