பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. தொழிலாளர் 198

உழைப்பதற்காக கருவிகளை உண்டாக்கிக்கொள்ளும் போதும், அவைகளைப் பயன்படுத்தும் போதும், நெருப்பைக் கண்டு பிடிக்கும் போதும், அதைப் பயன் படுத்தும் போதும், பஞ்சபூத சக்திகளின் பயன் பாட்டை அறியும் போதும் அவைகளைப் பயன் படுத்தும் போதும் அனுபவத்தில் அறிவைப் பெறுகிறான். அனுபவம் நடை முறைச் செயல்பாடுகள், உழைப்பு மூலம் அதிகமாகிறது. அதன் பலனாக மனிதனுடைய அறிவும் விரிவடைகிறது. மனிதன் தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்குச் சொல்லி, அது மேலும் மேலும் விரிவடைகிறது. எண்ணும், எழுத்தும் கண்டு பிடிக்கப் பட்டபோது, மனிதன் தான் இதுவரை பெற்றிருந்த அறிவைச் சேகரித்து வைத்திருந்த அறிவைப் பதிவு செய்கிறான். இவ்வாறு பதிவு செய்யப் பட்ட அறிவு வேதங்களாகிறது. இலக்கியங்களாகிறது, பலவேறு நூல்களாகின்றன. அவைகளைத் கற்பது கல்வியாகிறது. i

கல்வி வளர்ச்சி பெறுகிறது. அடிப்படைக் கல்வி, வளர்ச்சியடைந்த கல்வி ஆகிய இரண்டையும் பெறுவதற்கு மனிதனுக்கு இப்போது வாய்ப்புகள் ஏற்பட்டு அவை இப்போது வளர்ச்சியடைந்திருக்கின்ற்ன. விரிவடைந்திருக்கின்றன. மேலும் விரிவடைந்து வருகின்றன. --

அறிவாளிகள், அதாவது ஆரம்பக் கல்வியையும், வளர்ச்சியடைந்து விரிவடைந்துள்ள கல்வியையும் பெற்றுக் கொண்டவர்கள் அதைத் தங்களதாக ஆக்கிக் கொண்டு, மனிதனுக்கு மனித சமுதாயத்திற்குத் தேவையான செல்வங்களை உண்டாக்கும் உழைப்பாளிக்குக் கிடைக்கவிடாமல் தடுத்து அதன் மூலம் உழைப்பினால் உற்பத்தி செய்யப் பட்ட செல்வத்தின் மீது தனது ஆதிக்கத்தை வைத்துக் கொள்வதற்கு முயற்சி செய்திருக்கிறான். அதற்காகக் கல்வியும், செல்வமும் ஒரு இடத்தில் இருக்காது என்று கதை கட்டி விட்டான். ஆனால் அவ்வாறு