பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கொல்லாமை ஜீவகாருண்யம் 216

இருப்பினும் நாம் பொறுமையாக இருந்து நாட்டு மக்களின் ஒற்றுமையை உருவாக்கி நாட்டின் மொத்த நலனைப் பாது காக்க வேண்டும்.

இந்தக் கட்டுரையில் பாரதியின் அரசியல், பொருளாதாரம், சமுதாய ஒழுக்கம், கலாச்சாரம், ஆன்மீக நெறி, மனிதாபிமானம், பாரதத்தின் பாரம்பரியப் பண்பாடு ஆகியவைகள் நிறைந்து அவருடைய பல்முனைக் கருத்துக்களும் வெளிப் படுவதைக் காண்கிறோம்.

பாரதியின் எழுத்து மேன்மைக்கும், சிறப்புக்கும் விசாலமான சிந்தனைச் செழுமைக்கும், நெடிது நோக்குப் பார்வைக்கும், பரந்த மனிதாபிமான தெய்வீக உள்ளத்திற்கும் இக்கட்டுரை சிறந்த எடுத்துக்காட்டாகும். பாரதி வாழ்க. +

xx xx xx