பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTT LS L TTTS SL TCL CTL LLLLLLLLTTTA LLSAKS LLLLLLLLS 000

நாடு விடுதலை பெற்ற பின்னர் நமது நாட்டில் மக்களாட்சிக்கான அரசியல் சட்டம் உருவாக்கப் பட்டிருக்கிறது. அரசியல் சட்டப்படி சாதி, மத, இன, மொழி, பால் வேறுபாடின்றி இந்திய மக்கள் அனைவரும் சமம் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இப்போது அது திருத்தம் செய்யப் பட்டு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப் பட்டு தேர்தல்கள் கிராமப் பஞ் த்து முதல் பார்லிமெண்ட் (மக்களவை) வரை எல்லா அமைப்புகளுக்கும் தேர்தல்கள் நடை பெறுகின்றன.

மத்திய பாராளுமன்றம், மாநில சட்ட மன்றங்கள், அரசியல் சட்டப்படி உருவாக்கப் பட்டிருக்கின்றன. மாநிலங்களில் கிராமப் பஞ்சாயத்து, நகரப் பஞ்சாயத்து, ஒன்றியப் பஞ்சாயத்து, மாவட்டப் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி முதலிய அமைப்புகள் உண்டாக்கப் பட்டிருக்கின்றன. அவைகளை முழுமையாக அரசியல் சட்டப்படியான அமைப்புகளாக நிலை பெறச் செய்ய வேண்டும். அவைகளின் அதிகார வரம்புகளையும் செயல் பாட்டு வரம்புகளையும் விரிவுப் படுத்த வேண்டும்.

கூட்டுறவு அமைப்புகளும் நமது நாட்டில் ஏராளமான எண்ணிக்கையில் பல துறைகளிலும் உருவாக்கப் பட்டுள்ளன. இவைகளையெல்லாம் ஜனநாயக பூர்வமாகச் சீராகச் செயல் படச் செய்வதற்குப் பல முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டியதிருக்கிறது.

கிராமங்களிலும், நகரங்களிலும் மக்களுடைய அடிப்படை வசதிகளை தேவைகளை நிறைவேற்றுவதற்காக பல குழுக்களையும் உருவாக்கி அரசின் தொடர்புடன் அவைகளை செயல் படுத்த வேண்டும் என்பதும் பாரதியின் சிந்தனையாகும்.