பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக்கருத்துக்கள்-அ. சீனிவாசன்-239

நிபுணர்களால் என்ன செய்ய முடியும்? என்னே நமது ஆட்சி நிர்வாகத்தின் அதிசய மூளை? இன்னும் நமது மேன் மக்களின் அன்னிய ஆங்கில சிந்தனை போகவில்லை. ஊர்மக்கள் உதவியுடன் ஆலோசனையுடன் பங்களிப்புடன் கீழ் மட்டங்களில் ஒரு பேரியக்கமாக நிறைவேற்ற வேண்டும். அதற்கான சிந்தனையும், திட்டங்களும் செயல்பாடும் தேவை.

அடுத்து விவசாயத்திற்கு அடுத்தப்படியாக அதாவது சாகுபடித் தொழிலுக்கு அடுத்தப்படியாக கால்நடைகளைப் பெருக்குதல், ஆடு மாடு, கோழி வளர்த்தல் வகையாறா ஒரளவில் இப்போது பால் உற்பத்தி, முட்டை உற்பத்தியில் முன்னேற்றம் கண்டிருக்கிறோம். இதை இன்னும் மும்மடங்கு பெருக்க வேண்டும். இது விவசாயத்தோடு சாகுபடியோடு, சிறுதொழில்களோடு இணைந்தது. பல்லாயிரக்கணக்கோர் ஈடுபடுவது. பல்முனைப் பயன்பாடு கொண்டது. அனைத்து மக்களுக்கும் பயன்படக் கூடியது. இதன் மூலம் நாடு செழிக்கும். மக்கள் நலம் பெறுவர்.

ஊர்தோறும், தெருக்கள் தோறும், பள்ளிக் கூடங்கள் தொடங்க வேண்டும். அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். ஆரம்பக் கல்வி கட்டாயம் கிடைக்க வேண்டும். மேல் படிப்பு விரும்பும் அளவு கிடைக்க வேண்டும். என்ஜினியரிங், வைத்தியம், தொழில் நுட்பம், விஞ்ஞானப் படிப்பு, கல்வி நிலையங்கள் அதிகரித்தால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். இட ஒதுக்கீடே அவசிய -மில்லாமல் போய் விடும். கல்லாமை நீங்க வேண்டும். அறிவு வளரும், இதில் நமது நாட்டுக் கல்வி சுதேசிக்கல்வி இடம் பெற வேண்டும். பாரதத்தின் பெருமை ஓங்க வேண்டும்.

ஊர் தோறும் உடற்பயிற்சி மன்றங்கள் அமைய வேண்டும். இது ஒரு அரசின் பணியாக மட்டுமில்லாமல் சமுதாயத்தின் பணியாக விரிவடைய வேண்டும். உலக விளையாட்டுப் போட்டிகளில் நமது