பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. நிறைவுரை - SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS _238

அதற்கான வரத்துக் கால்கள், வடிகால்கள், அணைகள், குறுக்கணைகள், தடுப்பணைகள், கால்வாய்கள், பாசனக் கால்வாய்கள் உள்ளன. தமிழ் நாட்டில் அவை சேர, சோழ, பாண்டிய பல்லவ மன்னர்களால் உருவாக்கப் பட்டவை. பாதுகாக்கப் பட்டவை. பராமரிக்கப் பட்டவை. விஜய நகர ஆட்சியாளர்களால் புதுப்பிக்கப் பட்டவை, விஸ்தரிக்கப் பட்டவை, பாதுகாத்துப் பராமரிக்கப் பட்டவை.

அவை சென்ற காலத்தில் குறிப்பாக அன்னிய ஆட்சி காலத்தில் போதுமான அளவில் கவனிக்கப் படாமல் புறக்கணிக்கப் பட்டன. இன்று அவை பெரிய அளவில் சேதப்பட்டும், சிதிலப் பட்டும், மேடிட்டும், ஆக்கிரமிக்கப் பட்டும் இருக்கின்றன. அவைகள் அனைத்தும் மறு சீரமைக்கப் பட வேண்டும். விரிவான அளவில் திட்டமிடப்பட்டு அவை புனரமைக்கப் பட வேண்டும். அரசும், பொது நிறுவனங்களும் பல்லாயிரக்கணக்கான மக்களும் பங்கு கொண்டு அவை நிறைவேற்றப் பட வேண்டும். கரைகளிலும், சாலை ஓரங்களிலும் காலி இடங்களிலும் ஆற்றோரங்களிலும் கால்வாய் ஒரங்களிலும், ஏராளமான செடிகள், மரங்கள் நட வேண்டும். இவைகள் மூலம் நீர்ப்பாசனம், குடிநீர், கால்நடைகளுக்குத் தண்ணி, நிலத்தடி நீர்பாதுகாப்பு, மரங்கள் வளர்ப்பு, தட்ப வெப்ப நிலை சமப்படுத்தல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு முதலிய பல நோக்கங்கள் நிறைவேறும்.

இவைகளை நிறைவேற்ற பலமுறை பேசப்பட்டிருக்கிறது. பல குழுக்கள், கமிட்டிகள் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் நடத்தப் பட்டிருக்கின்றன. வெளி நாட்டுக் குழுக்களும் போடப் பட்டிருக்கின்றன. ஆய்வுகள் செய்யப் பட்டிருக்கின்றன. சில வேலைகள் ஐரோப்பிய பொருளாதாரக் குழுமத்திடம் கூட கொடுக்கப் பட்டிருக்கின்றன. நமது நாட்டுப் பேராஅளருணி, செக்கான் ஊருணி, குழந்தையன் ஆசாரி ஊருணி, செட்டியார் ஊருணி, ஆலங்குளம், மேடங்குளம், ஆப்பனேரி, நக்கநேரியைச் சீரமைக்க ஐரோப்பிய