பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக்கருத்துக்கள்-அ. சீனிவாசன்-237

ஆன்மீகப் பிரச்னைகளையும் கல்வி கலாச்சாரப் பிரச்னைகளையும் கலை இலக்கியம் இசை உடற் பயிற்சி முதலிய அனைத்தையும் இணைப்பாகவே பார்த்தார்.

முதலில் மக்களுடைய ஏழை எளிய மக்களுடைய பசி, பட்டினி, வறுமையைப் போக்க வேண்டும். ஏழைகளுக்கு உதவி செய்தல், தர்ம சாலைகள் அமைத்தல், அன்ன தானம் செய்தல் முதலியவை தாற்காலிகமானவை. பயணிகளுக்கும், கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கும், யாத்திரிகர்களுக்கும், மற்றும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள். ஆனால் பசி, பட்டினி, வறுமை ஆகியவற்றை நிரந்தரமாக சமுதாயத்திலிருந்து நீக்க வேண்டும். உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அதில் உபரியும் சேமிப்பும் இருக்கும் படி செய்ய வேண்டும்.

சிறு தொழில்களை பல வழிகளிலும் பலவகைகளிலும் கிராமப் புறங்களிலும், நகரப்புரங்களிலும் அதிகரிக்கச் செய்யவேண்டும். சுய தொழில்கள் அதிகரிக்க வேண்டும். சுய உதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். அவை மூலம் நாட்டின் பொதுச் செல்வத்தைப் பெருக்க வேண்டும். விவசாயம், சிறு தொழில்கள் மூலம் நாட்டின் பொதுச் செல்வம் அதிகரிக்கும். அதற்கு சுதேச முயற்சிகள் அதிகரிக்க வேண்டும்.

விவசாயம், சிறுதொழில், பெருக்கவும், அதிகரிக்கச் செய்யவுமான அடிப்படை வசதிகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும். முதலில் நீர் நிலைகளை, நீர்ப் பாசன வசதிகளைப் பெருக்க வேண்டும். பாசனம், குடிநீர், கால்நடைகளுக்குக் குடிநீர், ஆதாரங்களை அதிகரிக்க வேண்டும். ஏற்கனவே நமது நாட்டில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் ஏராளமான ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், தெப்பக்குளங்கள், திருக்குளங்கள், ஊருணிகள்,