பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38._நிறைவுரை- = ------- 240

அவமானம் விரைவில் நீங்க வேண்டும். அனுமனும் பீமனும், பார்த்தனும் வாழ்ந்த இந்த நாட்டில் இன்றைய நோஞ்சான் நிலையை எத்தனை காலத்திற்கு சகிப்பது? -

ஊர்தோறும், கலை, கவிதை, இலக்கியம், இசை, நாடகம், முத்தமிழ் ஆடல்பாடல் மன்றங்கள் சபாக்கள் அமைக்க வேண்டும். அதன் மூலம் நமது இசை, சங்கீதம், இலக்கியம், கவிதை வளரும். நமது நாட்டின் அத்தனை இசை மரபுகளையும் வளர்க்க வேண்டும். இவைகளில் சிறந்தவர்களைப் பாராட்ட வேண்டும். நமது மறைந்த மேதைகளுக்கும் கவிஞர்களுக்கும் விழாக்கள் எடுக்க வேண்டும். நமது நாட்டுப்புற இசை, பெண்கள் பாட்டு, கும்மி முதலியன பிரபலப் படுத்த வேண்டும். நமது சங்கீதம், கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை விஞ்ஞான பூர்வமானது. உலகிலேயே மிகச்சிறந்த இசை அமைப்பு கொண்டது. அதில் ரஸ் ஞானத்தைப் பெருக்க வேண்டும். நமது இசையின் பெருமையை உலகரியச் செய்ய வேண்டும். அதன் புகழ் பரவ வேண்டும். மக்களின் கவலை தீர்ந்து மகிழ்ச்சி பெருக வேண்டும்.

ஊர்தோறும், தெருக்கள் தோறும் உள்ள நமது சிறப்பு மிக்க சிறிய பெரிய ஆலயங்களைப் புதுப்பிக்க வேண்டும். பூசைகள் சிறப்பாக நடைபெற வேண்டும். விழாக்கள் நடைபெற வேண்டும். மக்களின் பக்தியையும் நல்லொழுக்கத்தையும் அறநெறியையும் அன்பு நெறியையும் வளர்க்க வேண்டும். நமது சைவத்திரு முறைகள், திவ்யப்பிரபந்தங்கள், தாயுமானவர் பாடல், வள்ளலார் திருமுறைகள் மக்களிடம் பரவ வேண்டும். பக்தி இயக்கங்கள் பெருக வேண்டும். கோவில்களின் நிர்வாகத்தை பக்தர் மயமாக்க வேண்டும்.

ஜாதி மத பேதங்களை நீக்கி இந்து மக்கள் அனைவரையும் ஒன்று படுத்த வேண்டும். இந்திய மக்களை ஒற்றுமைப் படுத்த வேண்டும். அனைத்து மதங்களையும் இந்திய மயமாக்க வேண்டும்.