பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Запррели 22

தேச முன்னேற்றப் lങ്ങിക്കില്ല, ஈடுபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுய உதவிக் குழுக்கள் இப்போது சிறப்பாகச் செயல்படுவதாகச் செய்திகள் வருகின்றன. அவைகளை மேலும் அபிவிருத்தி செய்யலாம். விரிவு படுத்தலாம். கூட்டுறவு அமைப்புகள் பலவும் சீர்கெட்டுப் போயிருக்கின்றன. அவைகளைச் சீரமைக்க வேண்டும். பல நகரங்களில் ஸ்திரி சேவா சங்கங்களும், மகிளா சபாக்களும் செயல்படுகின்றன. அவைகளின் பணிகளிலும் அபிவிருத்தி காணலாம்.

3. சென்ற ஆண்டு நான் பிறந்து வளர்ந்த கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு கம்மவார் நாயுடு சமூகத்தினருக்குப் பாத்தியப்பட்ட ஒரு கோவில் இருக்கிறது. அது அருள்மிகு ரேணுகாதேவி (எல்லையம்மன்) கோவில். அக்கோவில் நூறாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஒரு சிறிய கோவில். அதைப் புதுப்பித்து பெரிய கோவிலாக கோபுரத்துடன் விமானத்துடன் கட்ட வேண்டும் என்று கம்மவார் சமூக இளைஞர்கள் பலரும் சமூகப் பிரமுகர்களும் சேர்ந்து முயற்சிகள் எடுத்தார்கள். நன்கொடைகள் சேகரித்தார்கள். இந்த கிராமத்தின் இந்த சமூகத்தைச் சேர்ந்த பலரும் மதுரை, திருச்சி, கோவை, சென்னை முதலிய நகரங்களிலும் லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும், பல உத்தியோகங்களில் வேலைகளில் இருக்கிறார்கள். டாக்டர்கள், என்ஜினியர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணிகள், சொந்தத் தொழில்கள் பலவற்றிலும், இருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர்கள் அரசியல் இயக்கத் தலைவர்களும் இருக்கிறார்கள். ஓரளவில் உயர்கல்வியும் விழிப்புணர்வும் உள்ள கிராமம் என்று கூறலாம்.

இந்த கிராமத்தைச் சேர்ந்தாற்போல, பக்கத்தில் பக்கத்திலுமாக ஐந்து ஊர்களும் இதர குடியிருப்புகளும் உள்ளன. அந்த