பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. soiléono, origin gowniki. 44

“அன்பே இன்பம் தரும், பகைமையை அழிக்கும் என்று தெரிந்தோமா? நல்லது எழுங்கள் கோடிக் கணக்கான மானிடர் எங்கும் எப்போதும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தத் தொடங்குவோம்” என்று பாரதி கூறி முடிக்கிறார்.

சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலுள்ள இடை -வெளியைக் குறைப்பதற்கு அதன் வேறுபாட்டைக் குறைப்பதற்குக் கோடிக்கணக்கான மக்களைத் தயார் நிலைக்கு முன் வரும்படி அறை கூவல் விடுக்கிறார்.

இன்று இந்திய நாடு சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுக்கும் மேலான பின்னரும் உள்ள நிலைமையில் அரசும் அரசாங்க நிர்வாகமும், அரசியல் கட்சிகளும் மக்களின் சமுதாய வாழ்வனைத்திலும் சம்மந்தப் பட்டதாக, அனைத்தளாவிய அமைப்பாக இருப்பது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். இன்று சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலுள்ள துரத்தைக் குறைப்பதற்கு சகல துறைகளிலும் மக்கள் நேரடியாகப் பங்குகொள்ளும் நிலையை உருவாக்கி வளர்க்க வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. அந்த வாய்ப்புகளைப் பயன் படுத்த வேண்டும்.

மக்கள் தேர்தல்களில் ஒட்டுப் போடுவதுடன் ஜனநாயகம் நின்று விடக் கூடாது. எல்லாப் பிரச்னைகளுக்கும் சர்க்கார் சட்டம் போட்டுத் தீர்க்க முடியாது. சட்டங்கள் போடப் பட்டாலும் அவற்றை அமுலாக்குவது எப்படி? அது தானாக அமுலாகி விடுமா? நடைமுறை செயல் பாட்டிற்கு வந்து விடுமா? அது நடப்பதில்லை.

கிராமப் பிரச்னைகள், தெருப் பிரச்னைகள், கல்வி, சுகாதாரம், குடி தண்ணிர், நீர்ப்பாசன அமைப்புகள், சிறு தொழில்கள், கிராமத் தொழில்கள், விவசாயம், பால் பண்ணைகள், சந்தைகள் மூலம் பண்டப் பரிவர்த்தனை கிராமக் கோவில் நிர்வாகங்கள் நகரங்களில் சிறிய கோயில் நிர்வாகங்கள், மொத்தத்தில் கோயில் நிர்வாகங்கள்,