பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTyLL LLLLLL LL LLLLLL LLLCL LLLLLLTTTAyLSKS LLLLLLLS00

பாட சாலைகள், சிறிய வழக்குகள் விசாரணையும் தீர்வும், நீர்நிலைகள், ஊருணிகள், குளங்கள், திருக்குளங்கள், ஏரிகள், முதலியன கிராமச் சாலைகள் அவைகளின் பராமரிப்பு, கூட்டுறவு அமைப்புகள், சுய உதவிக்குழுக்கள், சமூக சேவை அமைப்புகள், சபாக்கள், கலை இலக்கிய அமைப்புகள் முதலியவற்றையெல்லாம் தேவைப்படும் அளவிற்கு, வாய்ப்புள்ள அளவிற்கு அரசாங்க நிர்வாக அமைப்புகளின் ஆலோசனைகளையும் உதவிகளையும் சாத்தியமான அளவில் பெற்றுக் கொண்டும் நமது நாட்டின் கிராமப் புறங்களின் நகரப் புறங்களின் நிர்வாகத்தில் பல லட்சக்கணக்கான, பல கோடிக்கணக்கான மக்கள், ஆண்களும், பெண்களும் நேரடியாகப் பங்கு கொள்ளும் நிலைமை ஏற்படுமானால் மக்களுக்கிடையிலுள்ள பல பிரச்னைகளும் சுலபமாக சுமுகமாகத் தீரும். மக்களுடைய அறிவாற்றலும், சிந்தனை ஆற்றலும் செயல் பட்டு பல அற்புதங்களைப் படைக்கும்.

பாரதி தனது அரசியல் பார்வையில் தேச விடுதலை பற்றிய பிரச்னைகளில் முதல் முனைப்பு காட்டிய போதிலும், சமுதாயத்தில் உள்ள எல்லாவிதமான பாகுபாடுகளும், வேறுபாடுகளும் ஏற்ற தாழ்வுகளும் நீங்கி தேச பக்தியும், தெய்வ பக்தியும் நிறைந்த சுய நிர்வாகத்தை நடத்தும் முழுமையான விடுதலை பெற்ற சமுதாயத்தைப் பற்றி சிந்தித்தார்.

ஏற்கனவே பாரத சமுதாயத்தின் பொதுவான வளர்ச்சியில் முன்னேற்றத்தில் மக்களுடைய பங்கு மகத்தான பங்காக இருக்கிறது என்பது நமது வரலாற்று அனுபவமாகும்.

XX XX - XX