பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.ஹிந்து-தர்மத்தின்-மேன்மை 55

கூட்டம் என்று அவதூறு செய்யவில்லை. ஹறிந்து தர்மம் யாரையும் எந்தத் தனி நபரையும் தனது ஆவணங்களில் பதிவு செய்யவில்லை. ஹறிந்து தர்மமே இஷ்ட பூர்வமாகவே மக்களை ஒன்றிணைத்து வந்திருக்கிறது. உற்சவ மூர்த்திகளின் தேர்களை இழுக்க யாரையும் வற்புறுத்தி அழைப்பதில்லை.

பாரத தேசத்தில் எத்தனையோ கிரேக்க அராபிய, பாரசீக, மங்கோலிய படையெடுப்பாளர்கள், படையெடுத்து இங்கிருந்த கோவில்களையும் இதர செல்வங்களையும் கொள்ளையடித்துப் போயிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான வழிபாட்டு ஸ்தலங்களை இடித்து அழித்து ஒழித்திருக்கிறார்கள். கடைசியாக ஐரோப்பியர்கள் அதில் மிக அதிகமாக ஆங்கிலேயர்கள், ஆயுதபலம் கொண்டு, பாரத நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடித்தும், அழித்தும், நாட்டை ஆக்கிரமித்தும் சூரையாடினார்கள். பல கோடிக்கணக்கான ரூபாய் பணம் செலவழித்துத் தங்கள் மதங்களை நிறுவ முயன்றார்கள்.

பாரத நாட்டின் பாரம்பரியமான தொழில்களை அழித்தார்கள். சாகுபடி முறைகளை சிதைத்தார்கள். நீர்ப்பாசன முறைகளை. சிதைத்தார்கள். கால்நடைகளைக் கொன்று தின்றார்கள். ஆக்கிர மிப்புப் போர்களால் மக்களின் அமைதியான வாழ்க்கையை சிதைத்தார்கள். தங்கள் கல்வி முறையைப் புகுத்தி இந்த நாட்டின் அறிவையும், ஆத்மாவையும் சிதைக்க முயன்றார்கள். பல லட்சக் கணக்கான பாரத மக்கள் பசி பட்டினியால் பஞ்சத்தால் செத்து

மடிந்தார்கள்.

இவ்வாறாகக் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக பாரத நாடு பல அன்னியப் படையெடுப்புகளுக்கும் கொள்ளைகளுக்கும், ஆட்சிக் கொடுமைகளுக்கும் ஆளாகி பல நஷ்டங்களுக்கும், சேதங்களுக்கும்