பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TLTLLL LSLLLLLSLLLSTCLLy TMCTT LLLLLLTTCiSK TyLLSL0

எனவே இடைக்காலத்தில் பாரத ஜாதிக்கு ஏற்பட்டுள்ள கேடுகளைப் போக்கி, இந்த நாடு அனைத்துத் துறைகளிலும் விடுதலை பெற்று மேன்மையுற வேண்டும் என்பது பாரதியின் கொள்கையாகும். அதைப் பாரதி, பாரத நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மறு பிறப்பு என்று கூறுகிறார். 'இடைக் காலத்தே நமக்குச் சேர்ந்த கேட்டிற்கு, சங்கீதத்தையும் கவிதையையும் திருஷ்டாந்தமாகக் காட்டினோம். ஆனால் இந்தக் கேடு அவை இரண்டையும் மாத்திரமே தொட்டு நிற்கவில்லை. நமது சித்திரத் தொழில், நமது சிற்பம், நமது ஜனக் கட்டு, ஜன நீதி, நமது சாஸ்திரம், தலைகால் எல்லாவற்றிலும் இந்தக் கேடு பாய்ந்து விட்டது. நோய் முற்றிப் போயிருந்தது. நல்ல வேளையில் பராசக்தி நமக்குள் உயர்ந்த வைத்தியர் பலரை அனுப்பினாள். அவளுக்கு நம் மீது கிருபை வந்து விட்டது. எனவே பிழைத்தோம். ஆனாலும் இம்முறை பிழைத்தது புனர்ஜென்மம். இந்தப் புனர் ஜென்மத்தின் குறிகளை எல்லாவற்றிலும் காண்கிறோம். பாரத ஜாதி புதிதாய் விட்டது. தற்காலத்திலே பூமண்டலத்து மகாகவிகளிலே நமது ரவீந்திரநாதர் ஒருவர் என்று உலகம் ஒப்புக் கொள்கிறது. இதுவரை ஐரோப்பிய பண்டிதர்கள், இயற்கை, நூல், (பிரகிருதி சாஸ்திரம்) தமது விசேஷ உரிமையென்று கருதி வந்தார்கள். இப்போது நமது ஜகதீஷ் சந்திரவஸ் அந்த வழியில் நிகரற்ற திறமை பெற்றவர் என்பதை மேல் நாட்டு வித்துவான்களில் ஒப்புக் கொள்ளாதார் யாருமில்லை. தமிழ் நாட்டிலே புதிய கவிதையும், சாஸ்திர ஒளியும் விரைவிலே தோன்றும். உலகம் பார்த்து வியப்படையும்.

“செத்துப் பிழைத்தோம். ஆனால் உறுதியாக நல்ல வயிரம் போல பிழைத்து விட்டோம். புதிய ஜன்மம் நமக்கு மிகவும் அழகான ஜென்மமாகும் படி தேவர்கள் அருள் புரிந்திருக்கிறார்கள். அதன் பொருட்டு அவர்களை இடை விடாமல் வாழ்த்துகிறோம்” என்று மகாகவி குறிப்பிடுகிறார்.