பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#14 அமெரிக்கப் பத்திரிகைகளிற் பெரும்பாலனவும், ராஜதந்திரிகளிற் பெரும்பாலோரும், இவ்விஷயத்தில் ஜெர்மனிக்கனுகூலமாகவே பேசுதல் குறிப்பிடத்தக்கது. ஜெர்மானியரால் இந்த பாரத்தைச் சுமக்க முடியா தென்றும், இந்த ஏற்பாட்டிலிருந்து அமெரிக்க வியா பாரத்துக்கு இடையூறு விளையுமென்றும் அமெரிக்காவில் பலமான நம்பிக்கை யேற்பட்டிருப்பதாக ராய்ட்டர் தெரிவிக்கிருர். ஜனதிபதி வில்ஸனுடைய பத்திரிகை யாகிய 'நியூயார்க் உலகம்' என்பது-ஜெர்மன் ஏற்றுமதி களின் மீது விதிக்கும் தீர்வையால் அமெரிக்காவுக்கு ஏற்று மதியாகும் வஸ்துக்களின் அளவு குறைந்துவிடும். இதினின்றும் விளைபொருள் வாங்குவதற்கு வேண்டிய நாணயம் ஜெர்மனிக்குக் குன்றிப் போகும். எனவே ஜெர்மனி மீளவும் உத்தாரணம் பெறுதல் இயலாது போய்விடும் என்றெழுதுகிறது. இள்வாறு அமெரிக்காவில் ஜெர்மனிக்குத் தக்க உபபல மிருப்பதைக் கருதுமிடத்தே, வோன் ஸிமோன்ஸ் சொல்லியபடி நேசக் ககதியாரின் திட்டம் வெறும் மூட பக்தியாகத்தான் முடியுமென்ற எண்ணம் எவருக்கு முண்டாகக்கூடும். ஆனால், இங்ங்ணம், மஹாயுத்தத்தால் நேசக் ககதியார்களுக்கு விளைந்திருக்கும் நஷ்டங்களை சிரமமில்லாமல் ஜெர்மனியின் தலையில் கட்டித் தாம் தப்பிவிடலாமென்று கருதும் மூட பக்தியைக் காட்டிலும் மற்ருெரு பெரிய மூட பக்தி யிருக்கிறது. அதைக் குறித்துச் சில வார்த்தைகள் சொல்லுதல் நமது கடமை என்று நினைக்கிருேம். அந்த மூட பக்தி நேசக் ககதியாருக்குள்ளே பொதுவாக இருப்பினும், அவர்களுக்குள் மந்திராலோசனை முதலிய விஷயங்களில் தலைமை பூண்டிருக்கும் இங்கிலாந்தி னிடம் மிகவும் விசேஷமாகக் காணப்படுகிறது. இதனை ஒரு திருஷ்டாந்த மூலமாக விளக்குகிருேம்.