பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 இந்த குணத்திலிருந்து கடைசிப் பயனுக விளைந்த ஐரோப்பிய மஹா யுத்தத்தினல் தாம் எய்திய கஷ்டங்களை உணர்ந்த பின்னராவது அவர்களுக்கு இந்த குணம் அடியோடு தொலைந்து விட்டதென்று நினைத்தோம். ஆனல் பிறவிக் குணத்துக்கு மட்டை வைத்துக் கட்டினல் போதுமா? இத்தனை கஷ்டங்களுக்குப் பிறகும் இந்தகுணம் அவர்களைக் கொஞ்சம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது உள் நாட்டுக் குழப்பத்தை அடக்குவதற்கு வேறு நியாயமான வழி தெரியாமல், பிற நாடுகளுடன் போர் தொடுத்து, அதினின்றும் ஸ்வ ஜனங்கள் ஏராளமாக மடிந்து தொலைவார்களாதலால் அங்ங்ணம் உள் நாட்டுக் கலகம் தானே சாந்தி பெற்று விடுமென்று எதிர்பார்த்துப் பிற தேசங்களோடு போர் தொடங்குதல் சக்தியற்ற ராஜதந்திரிகளின் ஹீன மார்க்கங்களில் ஒன்று. அதை முன்பு ருஷியா தேசத்துச் சக்ரவர்த்தி அனு வரித்தார். அவர் அதனல் எய்திய முடிவைக் கண்டும் புத்தி தெளியாமல், இன்று வேறு சில ஐரோப்பிய தேசங் களின் ராஜதந்திரிகள் அந்த வழியை அனுஸரிக்க எண்ணு கிருர்களென்று நினைக்க பலமான ஹேதுக்கள் இருக்கின் றன. ஆனல், இனி ஐரோப்பாவில் அல்லது மேற்கு ஐரோப் பாவில், குறைந்த பக்ஷம் இன்னும் 30 வருஷங்களுக்கு ஜனங்கள் யுத்தத்தின் பெயரையே ஸ்மரிக்க மாட்டார் களென்பது திண்ணம். சூடுகண்ட பூனை அடுப்பங்கரையை அனுகாது. எனிலும் ஐரோப்பிய தேசத்தார்களுக்குள்ளே ஏற் பட்டிருக்கும் விரோதங்களே மூடும் பொருட்டு ஐரோப்பா முழுவதையும், அல்லது வெள்ளே ஜாதியார் அனைவரையும்