பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II9 ஆசியா, ஆப்பிரிகா ஜனங்களின் மீது போருக்கு விடலா மென்று சில மதி கேடர் யோசனை செய்கிருர்கள்! லண்டன் 'டைம்ஸ்’ பத்திரிகை பொறுப்புத் தன்மை யுடையதாகத் தன்னை மிகவும் கணித்துக் கொள்ளுகிறது. இங்கிலாந்து தேசத்து மந்திரிகளைக் காட்டிலும் தனக்கு ப்ரிட்டிஷ் பரிபாலன விஷயத்தில் ஆயிரம் பங்கு அதிகப் பொறுப்புணர்ச்சி யிருப்பதாக நடிக்கிறது. அந்தப் பத்திரிகை தனது 1921 ஜனவரி 15-ஆம் தேதிப் பதிப்பில், மிஸ்டர் மக்ளுர் என்ற அமெரிக்கப் பத்திரிகாசிரியர் ரொருவர் எழுதிய 'மேற்கும் கிழக்கும் விரோதம்' என்ற வ்யாஸத்தை ப்ரசுரம் செய்திருப்பதுடன், அதைக் குறித்து ஒரு தலையங்கக் குறிப்பும் வரைந்திருக்கிறது. அந்த வ்யாஸ்த்தின் கருத்து யாதெனில் எதிர்காலத் தில் ஸ்மீபத்திலே ஏற்கெனவே நடந்த ஐரோப்பிய மஹா யுத்தத்தைக் காட்டிலும் பன் மடங்கு கொடிய பூகோள மஹா யுத்தமொன்று நடக்கப்போகிற தென்பது. இந்த யுத்தம் வெள்ளை ஜாதியாருக்கும் இதர வர்ணத்தாருக்கு மிடையே நடக்குமாம். ஜப்பானியரையும் சீனரையும் அமெரிக்காவும்ஆஸ்திரேலியாவும் தம்முள்ளே பிரவேசிக்கக் கூடாதென்று தடுப்பதை உத்தேசித்து மஞ்சள் வர்ணத் தாருக்கும் வெள்ளேயருக்கும் சண்டை வருமாம். ஜப் பானில் பூமி கொஞ்சம்; ஜனத்தொகை அதிகம். அதற்கு அதி சமீபத்தில் வட அமெரிக்கா இருக்கிறது. அங்கு விஸ்தாரமான பூமிகளிருக்கின்றன. ஜனத்தொகை மிக சொற்பம். இன்னும் உழவின் கீழே கொணராத மிக வள மார்ந்த மைதானங்கள் ஆயிரக் கணக்கான மைல்களில் பரவிக் கிடக்கின்றன. கனடாவிலுள்ள நிலங்களை நன்முக முழுமையும் பண்படுத்தினல் அதில் விளையக்கூடிய கோதுமை மனிதக் கூட்டத்தில் பாதிக்குப் போதிய உணவாகு மென்று கணக்கிடப் பட்டிருக்கிறது.