பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 உலகத்திலுள்ள பூமியை யெல்லாம் இங்ங்ணம் ஐரோப்பி யர் சூழ்ந்து கொண்டு, நிலத்துக்குத் தவிக்கும் ஜனங்களைத் தம் சூழல்களுக்குள் ப்ரவேசிக்கக் கூடாதென்று தடுப்பதை ஜப்பான் ஆக்ஷேபிக்கிறது. வலியவன் பேச்சு இறுதியில் வெல்லு மென்ற ஐரோப்பியக் கொள்கையை சாதகமாக எண்ணி ஜப்பான் தன் சண்டிைக் கப்பல்களை அதிகப் படுத்திக் கொண்டு வருகிறது. தன் பீரங்கிகளைப் பெருக்கு கிறது. தன் படைகளே பலப்படுத்துகிறது. இதைக் கண்டு அமெரிக்காவுக்கு நடுக்க மேற்பட்டிருக் கிறது. அமெரிக்காவுக்கு இங்கிலாந்து கழுத்து வரை கடன் பட்டிருக்கிறது. இங்கிலாந்துக்கும் ஜப்பானுக்கும் நட்புடம் பாடு செய்து கொள்ளப் பட்டிருக்கிறது. ஆனல் ஜப்பானு டன் சேர்ந்து கொண்டு இங்கிலாந்து அமெரிக்காவுடன் போர் செய்யாதென்று மிஸ்டர் மக்ளுர் ப்ரமாணம்பண்ணு கிரு.ர். அதை லண்டன் 'டைம்ஸ்' பத்திராதிபர் மனப் பூர்வமாக ஆமோதிக்கிரு.ர். மேலும் தென் ஆசியாவிலும் ஆப்ரிகாவிலுமுள்ள ஜனங்கள் ஐரோப்பாவின் ஆட்சியைத் தள்ளி விடப் போகிருர்களாம். அவர்களிடம் ஆயுதங்கள் இல்லையே யெனில், அவர்கள் அவற்றை மிக விரைவில் செய்து கொள்வார்களென்று மிஸ்டர் மக்ளுர் சொல்லுகிரு.ர். இந்த யுத்தத்தில் சில ஐரோப்பிய தேசத்தார்.ஆசியாக் கண்டத்தாரின் பக்கத்திலே சேர்ந்து கொள்ளக்கூடு மென்று மிஸ்டர் மக்ளுர் சொல்லுகிரு.ர். எனவே, வெள்ளை ஜாதியாருக்குப் பெரிய ஆபத்து வரப்போகிறதென்று மிஸ்டர் மக்ளுர் பலமாக எச்சரிக் கிரு.ர். ஆனல் ஆசியா இந்தியாவின் தலைமைக்குட்பட்டது. இந்தியா ஐரோப்பியரைக்கூடக் கொல்ல விரும்புவதில்லை. திருத்த விரும்புகிறது. எனவே, ஐரோப்பியர் இந்தப்புதிய