பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 மித்திரன் தந்திப் பக்கங்களிலே காணலாம். மிஸ்டர் ஆஸ்க் வித் (மாஜி ப்ரதம மந்திரி) இங்கிலாந்துக்கு ராணுவ விபத் துக்கள் ஏற்படாதபடி தடைகளேற்படுத்திக் கொண்டு மற்றப்படி ஸம்பூர்ணமான ஸ்வராஜ்யம் கொடுக்கவேண்டு மென்று பார்லிமெண்ட் ஸ்பையில் சொன்னர். எழுந்தார் லாய்ட் ஜ்யார்ஜ் மந்திரி. கத்தியைச் சுற்றத் தொடங்கிவிட்டார். மெய்யான உருக்குக் கத்தி யன்று; பாஷைக் கத்தி; வாக்கு வாள். ஐர்லாந்துக்கு ஸ்வா தீனம் கொடுத்த பிறகும்கூட பழைய புண்களை மறந்து ஐர்லாந்து இங்கிலாந்திடம் நட்புச் செலுத்துமென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் நம்பவில்லை. அவரால் நம்ப முடி யவில்லை. குற்றமுள்ள நெஞ்சு குறு குறு குறு குறு என்னு மாம். அவருடைய இனத்தார் பண்ணிய பிழைகளெல்லாம் அவருக்குத் தெரியாதா? எனினும், ஆங்கிலேயர் தம்மைப் போலே பிறரையும் நினைத்து ஸித்தாந்தங்கள் ஏற்படுத்து வது தவறென்றும் ஐரிஷ் ஜாதியாருடைய சரித்திரத்தை நோக்குமிடத்தே, அவர்கள் நெடுங்காலமாகக்கஷ்டப்பட்டு பரிசுத்தமடைந்த கூட்டத்தாராதலால், அவர்களுடைய மனம் கல்மனதாக இராமல் நன்முகக் குழைந்து, பக்குவப் பட்டு, தெய்வபக்திக்கு வசப்படுவதாகச் சமைந்திருத்தல் விளங்குகிறதென்றும், ஆதலால், ஐர்லாந்து தனக்கு ஸ்வா தீனம் கிடைத்தால், விரைவிலே இங்கிலாந்தின் பழைய பிழைகளை மறந்து, இங்கிலாந்துடன் உண்மையான நட்புப் பாராட்டியே வருமென்றும் நான் நினைக்கிறேன். ஐர்லாந் துக்கு ஸ்வாதீனம் கொடுத்ததால், அந்நாட்டிற்கும், இங் கிலாந்துக்கும் கேடு சூழும் பிற நாடுகளுக்கும் அஃதோர் தூண்டுதலாகுமென்று மிஸ்டர் லாய்ட் ஜ்யார்ஜ் சொல்லு கிரு.ர். ஐரிஷ் துறைமுகங்களின் பரிபாலனம் இங்கிலாந்தின் கையின்றும் நழுவுமாயின் அதனால் இங்கிலாந்தின் ராணுவ சக்திக்கு பங்கம் நேருமென்ருர். அங்ங்ணம் நேரும்படி