பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II தாம் பிறந்த தமிழ் நாடு, தாம் பிறந்த பாரததேசம் இவற்றை நோக்குவதோடு உலகத்தையும் அவர் மறந்து விடவில்லை. ஏறு, ஏறு, ஏறு: மேலே, மேலே, மேலே! என்று எழுதுகிருரே அவரே மேலே மேலே ஏறி வானில் நின்று உலகனைத்தையும் தமது பார்வையிலே ஒருமை உணர்ச்சியோடு பார்க்கிருர்!. தமிழ் நாடு வாழ்க என்று எழுதியவர் பாரத மணித் திருநாடு வாழ்க என்று எழுதியவர் இப்பொழுது உலகம் வாழ்க என்று முழங்குகிருர். அவருடைய உள்ளமும் பார்வையும் அப்படி விரிந்து விட்டன. 'ஜாதி இரண்டொழிய வேறில்லை" என்ற பழந் தமிழ் வாக்கியத்தை வேதமாகக் கொள் என்று தமிழருக்கு பாரதியார் அறிவுரை கூறுகின்ருர். இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர் என்று அவர் ஜாதி வகுக்கிருர் 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்ற கருத்தையே இது வலியுறுத்துகின்றது. தமிழர்கள் அனைவரும் ஒரே ஜாதி என்பார் பாரதியார். "ஒரு ஜாதி, ஒர் உயிர்; பாரத நாட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி” என்று பாரத தேசத்தைப் பற்றிக் கூறவந்த விடத்து இவ்வாறு கூறுவார் பாரதியார். (பார்க்க: ஆறில் ஒரு பங்கு-முகவுரை.) பாரத ஜாதி ஒரேஜாதி; பிரிக்க முடியாதது; அழிவில் லாதது. என்று இதே கருத்தை அவர் மேலும் வலியுறுத்து கின்ருர். இப்பொழுது பாரதியார் உலகத்தைப் பார்க்கிரு.ர். பார்த்து என்ன சொல்லுகிருர்?