பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 என்றும் தெய்வம் பல பல சொல்லிப்-பகைத் தீயை வளர்ப்பவர் மூடர் என்றும் வெள்ளே நிறத்தொடு பூனை-எங்கள் வீட்டில் வளருது கண்டீர் பிள்ளைகள் பெற்றதப் பூனை-அவை பேருக் கொரு நிறமாகும் எந்த நிற மிருந்தாலும்-அவை யாவும் ஒரே தரமன்ருே? என்றும் அவர் எழுதுகிருர். முரசு ஒர் அற்புதக் கவிதைமணி. பாப்பாப் பாட்டு குழந்தைக்கு. முரசு எல்லாருக்கும். ஒரே குடும்பம் போல் வாழலாகாதா? என்ற வினவில் எத்தனை ஏக்கம் பொதிந்து கிடக்கிறது! நன்ருக எண்ணிப் பாருங்கள். இதுவே தமிழகத்தின்மீது பொதியமலை அளவு அன்பு, பாரத தேசத்தின்மீது இமயமலை அளவு அன்பு, உலகத்தின் மீது வானளவில் அன்பு என்று தமது அன்பை விரிவுபடுத்தி விசுவரூபம் எடுக்கச் செய்து கொண்டிருக்கும் நமது கவிஞருக்கு மனிதகுலம் செய்யக் கூடிய நன்றி யாகும். பாரதியும் பாரததேசமும் என்ற நூலைப் போலவே இந்த நூலிலும் சென்னை நியூசெஞ்சுரிபுக் ஹவுஸ் நிறுவனத் தார் அரிதில் முயன்று திரு இளசைமணியன் அவர்களின் உதவியோடு வெளியிட்டுள்ள பாரதிதரிசனம் என்றநூலின் முதல் இரண்டு பாகங்களிலிருந்தும் சில கட்டுரைகளை