பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I சாதாரண இங்கிலீஷ் படிப்பாளிகளின் கொள்கையை நான் ஆதரிக்கவில்லை. உலகத்து மனிதர்கள் எல்லாரும் ஒரே சாதி. வசுதைய குடும்பம்’ என்ற பத்ருஹரியின் கொள்கை யைத் தழுவியுள்ளேன்' என்கிரு.ர். இத்துடன் நிற்கவில்லை; இன்னும் மேலே போகிருர். 'பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்! கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்! மண்மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள் யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே செய்தல் வேண்டும் தேவ தேவா!' என்று இறைவனை இறைஞ்சுகின்ருர் பாரதி. அவருடைய விரிந்து பரந்த உள்ளத்துக்கு இதைவிட வேறு எதைச் சொல்வது. இந்த உலகப் பார்வை பாரதிக்கு இருந்த்தால்தான் தன் நாட்டு விடுதலையுடன், உலக விடுதலையையும் விரும்புகிரு.ர். இத்தாலி தேசத்தின் விடுதலைக்காகப் போரா டி ய ம்ாஜினியைப் பாராட்டி வாழ்த்துகிருர். மாஜினி தன் தாய் நாட்டை விடுவிக்க எடுத்துக்கொண்ட் சபதத்தை உணர்ச்சி கொப்பளிக்கத் தம் பாட்டிலே வடித்துக் காட்டுகிரு.ர். உலகில் சர்வாதிகாரம் ஒழிந்து மக்களாட்சி மலர்ந்தால், பாரதியின் உள்ளம் புளகாங்கிதம் அடைகிறது. கம்பீரமாக அதை வாழ்த்திப் பாடுகிரு.ர். ருஷ்ய நாட்டில் ஜார் மன்னனின் கொடிய ஆட்சி ஒழிந்து, குடிமக்கள் சொன்னபடி குடி வாழ்வு மேன்மையுற, குடிமை நீதி ஆங்கே தோன்றிய செய்தியைக் கேட்டவுடன், பாரதிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. உடனே துள்ளிக் குதித்து எழுகிரு.ர். எழுச்சி பொங்க அதை வரவேற்றுப் பாடுகிருர். மாகாளி பராசக்தி உருசிய நாட்டினில் கடைக்கண் வைத்தாள்! அங்கே ஆகா என்று எழுந்தது.பார் யுகப்புட்சி! கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்! வாகான தோள்புடைத்தார் வானமரர் பேய்களெல்லாம் வருக்திக் கண்ணிர்