பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 போகாமல் கண்புகைந்து மடிந்தனவாம் வையகத்தீர் புதுமை காணிர்! என்று வீரமுழக்கம் செய்கிருர் பாரதி. ருஷ்யப் புரட்சி பாரதியாருக்கு ஏதோ தன் நாட்டுக்குச் சம்பந்தமில்லாத நிகழ்ச்சியாகத் தோன்றவில்லை. உலக வரலாற்றில் ருஷ்யப் புரட்சியை மாபெரும் சம்பவமாக, பொன் ஏடாகக் கருதுகிருர். மனித சமுதாயத்தின் மலர்ச்சிக்கு அதை ஒரு திருப்பு முனையாகக் காண்கிருர். அதனுல்தான் ருஷ்யப் புரட்சி என்று சொல்லாமல் "யுகப்புரட்சி!” என்கிரு.ர். ருஷ்யப் புரட்சியால் உலகத்துக்கே நன்மை ஏற்படப் போகிறது என்று எழுதுகிரு.ர். “பூமியில் நல்ல யுகம் தோன்றப் போகிறது, மனித சாதி முழுவதிற்கும் விடுதலை உண்டாகப்போகிறது, ருஷ்யாவில் ஏற்பட்ட புர்ட்சியானது இனி வரப் போகின்ற நற்சமுதாயத்தின் நல் அடையாளங் களில் ஒன்று. பூமி தூளாகாது. மனிதர்கள் ஒருவருக் கொருவர் செய்துவரும் அநீதி தூளாகும்” (பாரதி தமிழ் பக்கம் 184-185) என்று அறுதியிட்டு உறுதி கூறுகிரு.ர். உலகத்தில் எங்கேனும் விடுதலை முழக்கம் கேட்கிறபோது, மக்கள் ஆட்சி மலர்கிறபோது, அநீதி அழுகிறபோது ஆனந்தக் கூத்தாடியவர் பாரதி; அதே சமயம் ஒரு நாடு அக்கிரமமாக ஆக்கிரமிக்கப்படும்போது அதை எதிர்த்துக் குரல் கொடுக் கிருர். ஆக்கிரமிப்புக்குள்ளான நாட்டுக்காகக் கண்ணிர் வடிக்கிரு.ர். ஜெர்மன் கெய்சர், சக்திவாய்ந்த தன் படையின் மூலமாக பெல்ஜியத்தை ஆக்கிரமித்துக்கொள்கிருன். சின்னஞ்சிறு நாடான பெல்ஜியம் ஜெர்மனியுடன் எதிர்த்துப் போராடு கிறது; தோற்றுவிடுகிறது; ஜெர்மனிக்கு அடிமை நாடாகப் போய்விடுகிறது. அதன் வீரம் பாரதியைக் கவர்கிறது. எந்த நாடும் தன் சுதந்திரத்துக்காக இப்படித்தான் போராட வேண்டும் என்று உணர்கிருர். அந்த உணர்வு அவர் இதயத் தில் இருந்து பொங்கி வருகிறது. 'அறத்தினுல் வீழ்ந்துவிட்டாய் அன்னியன் வலியணுகி மறத்தினுல் வந்து செய்த வன்மையைப் பொறுத்தல் செய்வாய்