பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அசாசுவதமான ஒரிடைக்காலமேயன்றி வேறில்லையென்ற நம்பிக்கையை நாம் உறுதியாகப் பற்றி நிற்போம். மனித சரித்திரத்தின் இந்த அசாசுவதமான குணத் தைத் திருப்தி செய்யும் பொருட்டு சாசுவதமான வேலை செய்வோர் இனி வரப்போகிற உண்மையான விடுதலைக் காலத்துக்குத் தகுதியில்லாது போவார்கள். ஜாதியக் கொள்கை தடையின்றி வளர்வதனல் மனுஷ்ய நாகரிகத்தின் ஆதாரநீதி தன்னையறியாமலே மாறுபடுகிறது. சமூகத்து மனுஷ்யனுடைய உத்தம லக்ஷயம் பிறர் நலம். ஆனல் ஜாதி தொழிலாளித்தனம் உடையதாகையால் அதற்குத் தக்கபடியே அதன் உத்தம லக்ஷயம் தன் நலம். இதேைலயே தனி மனுஷ்யன் தக்குனத் தனக்கென்ற அவா உடையவனாக இருந்தால் பழிக்கப்படுகிருன். ஒரு ஜாதி அப்படியிருந்தால் புகழப் படுகிறது. இதல்ை ஏக்கத்துக்கிடமான நீதிக் குருட்டுத் தனம் உண்டாகிறது. அது ஜனத்தின் மதத்தை ஜாதியின் மதத்தோடு ஒன்முகப் போட்டுக் குழப்புகிறது. இதனலே தான் உலகத்தின் பெரும் பகுதியை கிறிஸ்தவ ஜாதியார் ஆளுவதனலே கிறிஸ்து மதந்தான் உயர்ந்ததென்று சொல்லுவோர் சிலர் இருப்பதாகக் காண்கிருேம். இது ஒரு திருடன் களவு செய்த சொத்தை அளவிட்டு அவன் மதக் கொள்கையை ஆதரிப்பதொக்கும். ஜாதிகள் தாம் பிற மனிதரை யதேஷ்டமாகக் கொன்று முடித்தது பற்றி ஆலயங்களில் விசேஷங் கொண்டாடுகின்றன. "டக' ஜாதிக் கள்வர் கூட்டம் தமது கொள்கையை நிறைவேற் றியது, தாம் வணங்கிய தேவியின் கிருபையென்று நிஜனத்தார்கள் என்பதை மேற்படி ஜாதிகள் மறந்துவிடு கின்றன. 'டக ஜாதியார் விஷயத்தில் அவர்களுடைய தேவதையை வெளிப்படையாகவே ஸம்ஹார மூர்த்தி யென்று சொல்லி வணங்கினர். அதுமேற்படி குற்றவாளி