பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ம ல் வெளியே கிளைத்து விடுகின்றன என்பதும் மெய்தான். ஆனல் அவை தம் நெற்றி மீது பழிச்சூடு போட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றின் வெற்றியே அவற்றின் கொடுரருபத்தை அதிக கோரமாகக் காட்டுகிறது.மனுஷ்ய சரித்திர முழுமையிலும் துன்பப்படுவோர் சிலரும் படுத்து வோர் பிறரும் இருக்கவே செய்வார்கள். தீமையை வெல் லுதல் எக்காலத்திலும் பரிபூரணமாக நிறைவேருது. தீ எரிவது போல் நமது நாகரிகத்தில் அது தொடர்ச்சியாக நடக்கும் செய்கையாம். நித்தியமான பரிபூரணத்வ லக்ஷயத்துக்கும் அதன் நிரந்தர ஸ்தானத்துக்கும் உள்ள பொருத்தமே ஸ்ருஷ்டி யென்று சொல்லப் படும். நன்மையென்னும் உடம்பாட்டு லக்ஷயம் ஸாதனக் குறைவு என்ற எதிர்மறையுடன் சமவேகமாகச் செல்லும் மட்டும், அவ்விரண்டுள் முழுப் பிரிவுண்டாகாதிருக்கும் மட்டும் நாம் துன்பத்துக்கும் நஷ்டத்துக்கும் பயப்பட வேண்டா. ஆதலால் முற்காலங்களில் யாதேனு மொருஜனம் கலகத் தொடங்கிப் பிறருடைய மனுஷ்ய உரிமையைப் பறித்துவிட முயன்ற போது சில சமயங்களில் அந்த ஜனத் துக்கு வெற்றியும் சில சமயங்களில தோல்வியும் ஏற்பட்டது; அவ்வளவுதான். ஆனல் இந்த ஜாதியக் கொள்கை இன்று சர்வ சம்மதமாய்த் தனது தன்னலம் அளவிலே பிரமாண்டமாக இருப்பது கொண்டு அதை தர்மமென்று காட்டத் தலைப்படுமிடத்தே இந்தக் கொள்கை பிறர் சொத்துக்களை கொள்ளையிடுவது மாத்திர மேயன்றி, மனுஷ்ய ஜாதியின் உயிர் நிலையைத் தாக்கு கிறது. தர்ம விதியைப் புறக்கணிக்கும் புத்தியை மனிதருக்கு அவசரமாகவே விளைவிக்கிறது. ஏனெனில் ஜனம் தர்ம