பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 விதியை தெய்விகமாக எண்ண, ஜாதி அந்த விதியைக் காற்றிலே தூற்றி விடுகிறதெதனால் எனில், ஜனத்தைக் காட்டிலும் ஜாதியே பெரிதென்ற கொள்கை பலவிதமான தந்திரங்களால் ஜனங்களுக்குக் கற்பிக்கப் படுவதனால் ©TöᏢ Ꮬ . ஒரு நோய் மூளையைக் தாக்கும் போது அது, மிகவும் கடுமையாகிறது என்று கேள்விப்படுகிருேம். ஏனென்ருல் எல்லாவிதமான வியாதி சக்திகளையும் இடைவிடாமல் முற்றுகை போடுவது மூளையேயாம். ஜாதியத் தன்னலக் கொள்கையின் உள் நிலைமை ஒரு ஜனத்திற்கு நேரிட்ட மூளை வியாதியைத் தவிர வேறில்லை. தற்காலத்து அந்த நோயின் அறிகுறிகள் எவையெனில் சிவந்த கண்களும், குவிந்த முட்டிகளும், கொடுஞ் சொற்களும், கொடுஞ் செயல்களுமாம். இயற்கையிலே உள்ள சொஸ்தமாக்கும் கருவிகளை அது நொறுக்கிப் போடுகிறது. ஜனசமூகத்தின் உயிருக்கு நல்ல வழி காட்டும் சக்தி யாதெனில் ஆத்ம த்யாகமும், அனுதாபத்துக்கும் கூட்டுத் தொழிலுக்கும் இடமாகிய தர்மசிந்தையுமே என்க. சூழ்ந்திருக்கும் வஸ்துக்களுடன் அனுகூல சம்பந்தம் கொண்டிருப்பதே அதன் தொழிலாம். இன்னும் பெருங்கேடு யாதெனில் ஜனங்களின் இந்தக் கோணல் நீதியானது தேசபக்தியென்ற பகட்டான பெயர் புனைந்து கொண்டு தன்னை ஒரு மேலான தர்மமாகக் காண் பித்துக் கொண்டு திரிகிறது. சுழலுகிற தனது தொத்து நோயை உலக முழுவதும் பரப்பித் தன் ஜ்வரத்தை ஆரோக்கியத்தின் சிறந்த குறியென்று முழங்குகிறது. இயற்கையில் தீங்கில்லாத ஜனங்களின் மனத்தில் பொருமையுண்டாக்குகிறது. Ljffs உ.-5