பக்கம்:பாரும் போரும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 என்றும் கண்டோம். ஆனல் அந்த அமைப்பால் இரண்டாம் உலகப் போரைத் தடுத்து நிறுத்த முடி யவில்லை. பேராட்சி வெறிகொண்ட ஜப்பான், ஜெர்மனி, இதாலி முதலிய நாடுகள், மறுபடியும் உல கத்தில் போர்த்தீயை மூட்டிவிட்டன. அதன் விளை வே இரண்டாம் உலகப்போர். இரண்டாம் உலகப்போர் முடிவுறுதற்கு முன் பாகவே, அமெரிக்க நாட்டுத் தலைவராக விளங்கிய ரூஸ்வெல்ட்டும், இங்கிலாந்து நாட்டின் போர்க் காலப் பேரமைச்சராக விளங்கிய வின்ஸ்டன் சர்ச்சி லும், சந்தடியின்றி அட்லாண்டிக் மா கடலின் ஒரு பகுதியில் ஒரு கப்பல் தளத்தின் மீது சந்தித்து அட் லாண்டிக் அறிக்கையை வெளியிட்டனர். அவ்வ றிக்கைதான் ஐக்கிய நாட்டுச் சபை' என்னும் உலக அமைப்பின் வித்தாகும். ஐ. கா. சபை: ஐ. நா. சபையின் அடிப்படைக் குறிக்கோள் உலக அமைதியே. வட கொரியர்களுக்கும் தென் கொரியர்களுக்கும் நடந்த போரை, இச்சபை தீர்த்து வைத்தது. இந்தோசீனுவில், மக்கள் உரிமை வேட் கை கொண்டு டாக்டர் ஹோசிமின் தலைமையில் பொங்கி எழுந்தனர். பிரெஞ்சுப் பேரரசு அந்நாட்டு மக்களுக்கு உரிமை தர மறுத்து, உள்நாட்டுக் குழப் பத்தைத் துாண்டிவிட்டுக் கொடுமை செய்தது. இதில் ஐ. நா. சபை தலையிட்டு அந்நாடு விடுதலை யடைய ஆவன செய்தது; பாரசீக நாட்டு முதலமைச் சரான டாக்டர் முசாதிக், எண்ணெய்க் கிணறுகளை நாட்டுடைமையாக்கிய பொழுது எழுந்த ஆங்கிலோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/112&oldid=820511" இலிருந்து மீள்விக்கப்பட்டது