பக்கம்:பாரும் போரும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O6 ஈரானியச் சண்டையைத் தீர்த்து வைத்து, அமை தியை நிலைநாட்டியது; கிரீசில் நடந்த உள்நாட்டுப் போரைத் தீர்த்து வைத்தது; எகிப்து நாட்டு அர சாங்கம் சூயஸ் கால்வாயை நாட்டுடைமை ஆக்கிய போது சூழ்ந்த போர் மேகத்தையும் விரட்டியடித் தது. ஐ. நா. சபையின் இச்செயல்கள் யாவும் மிகவும் பாராட்டுதலுக்குரியவை. - - அணுகுண்டு அச்சம்: இந்நிலையில் மீண்டும் உலகப்போர் வராமல் தடுக்க, ஐ. நா. சபையின் பாதுகாப்புக் கழகம் (Security Council) ஒன்றே போதுமா என்ற ஐயப்பாடு உலக மக்கள் உள்ளத்திலே தோன்றியிருக்கிறது. இரோசிமா, நாகசாகி ஆகிய இடங்களில் அணு குண்டினல் ஏற்பட்ட பேரழிவைக்கண்டு, ஜப்பானி யர் எவ்வளவு அச்சம் கொண்டனரோ அதைவிடப் பன்மடங்கு, வெற்றியாளர்களான அமெரிக்கரும், ஆங்கிலேயரும் கொண்டனர். அணுகுண்டானது இப்போது பணம் படைத்த வல்லரசுகளால், பெருஞ் செலவில் பெரிய படைக்கலத் தொழிற்சாலை களில் மட்டும் தயாரிக்கப் படுகிறது. ஆல்ை இதே அணுகுண்டு, சிறிய நாடுகளால் சிறிய தொழிற் சாலைகளில், குறைந்த செலவில் செய்து முடிக் கும் நிலைமை ஏற்பட்டால் என்ன ஆவது? அல்லது இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாகத் தனிப்பட்ட ஒருவல்ை, குடிசைத் தொழிலில் உருவாக்கக்கூடிய ஓர் எளிய பொரு ளாக அணுகுண்டு மாறி, ஒரு குறும்புக்காரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/113&oldid=820512" இலிருந்து மீள்விக்கப்பட்டது