பக்கம்:பாரும் போரும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 1 குறிப்பாக ஆசியப் பெருநிலத்திலுள்ள இந்தியா, சீனம், இலங்கை, பர்மா, ஜப்பான், மலேயா முதலிய பகுதிகளில் வாழும் மக்களின் தன்மையும் பண்பா டும் ஏறக்குறைய ஒத்து விளங்குகின்றன. புத்த சம யம் எல்லா நாடுகளுக்கும் பொதுவான ஒரு பாலமாக இருந்து இணைத்து வைக்கிறது. இந்து சமயம் பெற் றெடுத்த அன்புக் குழந்தைதானே பெளத்தம் ! எனவே இந்நாடுகள் ஒன்றுபட்டு வாழ்வதில் யாது தீதுளது? J - மத்தியக் கிழக்கில் வாழும் அரபு நாடுகளான ஈரான், ஈராக், துருக்கி, எகிப்து, அராபியா முதலிய வற்றில் வாழும் மக்கள் ஒரே இனத்தவர்; சமயத் தால் ஒன்றுபட்டவர்; அவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாட்சி அமைத்து வாழ்ந்தால் போர் வெறி கொண்ட வல்லரசுகள் அந்நாடுகளைத் தங்கள் கையில் உருளும் பகடைக்காய்களாகப் பயன் படுத்த முடியாதல்லவா ? இக்கூட்டாட்சி முறை உலக ஒருமைப் பாட்டிற்குச் சிறந்த வழி காட்டியா கும். இதைக்கேட்போர் ஏளனம் செய்வர்; எள்ளி நகையாடுவர் ; பகற் கனவு என்பர். ஆல்ை, இன் னும் எவ்வளவு காலமானுலும் உலகம் போரை ஒழித்து, இம்முறையில் ஒன்றுபடும் காலம் ஒன்று கட்டாயம் வரும். மனித உள்ளம் : இன்றைய சூழ்நிலையில் உலகம் ஒற்றுமை உணர்வை வளர்க்கும் என்று கூறுவதற்கில்லை. காரணம் மக்கள் உள்ளத்தில் உண்மை உணர்வு குன்றி, போலி உணர்வு மலிந்து வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/118&oldid=820517" இலிருந்து மீள்விக்கப்பட்டது