பக்கம்:பாரும் போரும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 2 எவன் போரின் கொடுமைக்கு இரங்கிப் பகலில் கண்ணிர் வடிக்கிருனே, அவன் இரவில் அணு குண்டு ஆராய்ச்சி நடத்துகிருன். அன்பைப்பற்றி யும் அருளைப் பற்றியும் எவன் மக்கள் முன்னிலையில் சொன்மழை பொழிகிருனே, அவன் உள்ளத்தால் அரக்கனகக் கரந்து வாழ்கிருன். மண்ணுசை, பெண்ணுசை, பொன்னுசை ஆகிய மூவாசைகளை யும் விலக்கி, பசித்தால் புசித்து, வியர்த்தால் குளித்து, நிழல் கண்டால் ஒதுங்கிப் பற்றற்ற வாழ்வு வாழவேண்டுமென்று எவன் உருக்கமாகப் பேசுகி ருனே, அவன் வயிருர உண்டு, புலரை நுகர்ந்து, உடலார உடுத்து உலகை ஏமாற்றுகிருன். சமத்து வத்தைப் பற்றிப் பொது மேடைகளில் பேசுபவன் பெரிய சர்வாதிகாரியாகிருன். மனிதனை மனிதனுக எண்ணும் உள்ளம் இவ்வுலகில் மருந்துக்குக் கூட இல்லை. வெள்ளே நிறம் படைத்தவன் கறுப்பு நிறத் தவனே வெறுக்கிருன். தென்னுப்பிரிக்காவில் வாழும் கறுப்பர்கள் இன்றும் தெருக்களிலும் உணவு விடுதிகளிலும் பொது இடங்களிலும் ஒதுக்கி வைக்கப்பட்டுச் சேரி வாழ் மக்களாக வாழ்கின்றனர். ஐ. நா. சபையின் தீர்ப்பைக்கூடத் தென்னுப்பிரிக்க அரசாங்கம் பொ ருட்படுத்தாமல் நிறத்திமிர் காட்டுகிறது. கடந்த சில: திங்கள்கட்குமுன் ஐக்கிய அமெரிக்காவில் லிட். டில்ஸ்ராக் என்ற இடத்தில், பள்ளிக்கு வந்த நீக்ரோ மாணவர்களை வெள்ளை மாணவர்கள் அடித்துக் துன்புறுத்திய செய்தியை உலகமறியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/119&oldid=820518" இலிருந்து மீள்விக்கப்பட்டது