பக்கம்:பாரும் போரும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 மக்களின் இத்தகைய மனப்போக்கு மாற வேண் டும். போலி உணர்வு நீங்கி, உண்மை உணர்வு ஓங்க வேண்டும். வருணத்தின் பெயரால், சமயத் தின் பெயரால், செல்வத்தின் பெயரால், வலிமையின் பெயரால், நிறத்தின் பெயரால் இவ்வுலகில் நிலவும் உயர்வு தாழ்வு ஒழிய வேண்டும். மனித உடலில் விலங்கின் உள்ளத்தைப்பெற்று வாழ்வதை விடுத்து, மனிதன் மனித உள்ளத்தோடு வாழக் கற்றுக் கொள்ள வெண்டும். மக்களின் இத்தகைய மனமாறுதலுக்கு ஏற்ற மருந்து தமிழகத்திலும், இந்தியத் துணைக்கண்டத்தி லும் மலிந்து கிடக்கிறது. முதன் முதலில், அந்த மருந்தை இன்ன செய்யாமை என்ற பெயரில் உலக அங்காடியில் விலே கூறி விற்றவர் தமிழகத்தின் தனிப் பெரும் புலவர் வள்ளுவரே! நம் கண்ண்ெ திரில் வாழ்ந்த காந்தியடிகள், அதே மருந்தை 'அஹிம்சை என்ற பெயரில் உலகிற்கு வழங்கினர். அணுகுண்டைத் தெய்வமெனப் போற்றி வாழும் இக்கால மக்கள், அவரைக் கோமாளி என்று கூறி எள்ளி நகையாடினர் ; வறட்டு வேதாந்தி என்று வம்பு பேசினர். இப்பாழும் உலகம் அறிஞரின் அறிவுரையை என்றும் ஏற்றுப் போற்றியதில்லை. - சோக்ரதருக்கு நஞ்சு வழங்கிக் கொன்ற நன்றி கெட்ட மக்கள் தாமே நாம் ! ஏசுவைச் சிலுவையில் அறைந்து கொன்ற கொடியவர் தாமே நாம் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/121&oldid=820520" இலிருந்து மீள்விக்கப்பட்டது