பக்கம்:பாரும் போரும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

இக்குடி மக்கள் ஊர்ப்பொது உணவு விடுதி (Public mess)களில் உண்டனர். அவ்வுணவு விடுதி கள் பிடிஷயா (Phiditia) என்று அழைக்கப்பட்டன. போர்க் காலங்களில் இவ்வுணவு விடுதிகள் ஒன்ருக இயங்கிப் போர் வீரர்கட்கு உணவைப் பங்கிட்டு வழங்கின. கிரேக்க நாட்டு மகளிர் கூட, உடற் கட் டும் வனப்பும் பெற்று, வலிவுள்ள குழந்தைகளைப் பெறுவதற்காக, ஆண்களைப்போல் உடற் பயிற்சி யளிக்கப்பட்டனர்.

கிரேக்கர்களின் போர்க்கடவுள் ஏர்ஸ் (Ares) ஆகும். அவர்களுடைய திருவிழாக்கள் யாவும் வீர விளையாட்டுக்களும், போட்டிகளும் நிறைந்து விளங் கின. காரணம், கிரேக்கக் கடவுளர் அவ்விளையாட் டுக்களால் மகிழ்ச்சியுறுவதாக அவர்கள் கருதினர். ஒவ்வோர் நகரிலும் விளையாட்டுப் போட்டிகள் நடை பெற்றன. ஒட்டப்பந்தயமும், தேர் செலுத்தும் போட்டியும், மற்டோரும், குத்துச்சண்டையும், வட்டு எறியும் போட்டி (Disc Throw) யும் பெரும்பாலும் இடம் பெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வன் தலையில் ஆலிவ் அல்லது லாரல் இலேயால் செய் யப்பட்ட முடியை அம்மக்கள் சூட்டினர். அவ்வீரன் மக்களால் சிறப்பாக மதிக்கப்பட்டான்.

இவ்வீர விளையாட்டுப் போட்டிகளில் சிறப் பானது ஒலிம்பியன் விளையாட்டுப் போட்டியாகும். இப்போட்டி முதன் முதலாகக் கி. மு. 776-இல் ஒலிம்பியா என்ற இடத்தில் நடத்தப்பட்டது. இப் போது நடைபெறும் உலக விளையாட்டுப் போட்டி யின் பெயரான ஒலிம்பிக் என்பது ஒலிம்பியா என்பதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/42&oldid=595583" இலிருந்து மீள்விக்கப்பட்டது