பக்கம்:பாரும் போரும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

இரண்டாயிரம் ஆண்டுகள் வட்டமிட்டுத் திரிந்தது. பதினெட்டாம் நூற்ருண்டு வரையில் புனித உரோ மப் பேரரசு என்ற பெயரால், ஓர் ஆட்சி கான்ஸ் டாண்டி கோபிளைத் தலைநகராகக் கொண்டு விளங் கியது குறிப்பிடத்தக்கது. இதன் காரணம் உரோ மானியரின் போர் ஆற்றலே என்ருல் மிகையாகாது.

அராபியர் :

நீரற்ற வெம்பாலையில் வாழும் மக்கள் எப்பொழு தும் முரடர்களாகவும், விடுதலை வேட்கை மிக்கவர் களாகவும் விளங்குவது இயல்பு. அவர்களே அடக்கியாள்வது முடியாது. இத்தகைய பண்புகள் கொண்டவரே அராபியர். விரைபரியும், ஒட்டக மும், கழுதையுமே அவர்களுடைய நீங்காத் தோழர் கள். வேறு நாடுகளில் ஒருவனேக் கழுதைக்கு ஒப் பிடுதல் இழிவானதாகக் கருதப்படும்; ஆல்ை அரேபி யாவில் உயர்வாகக் கருதப்படும். இவர்கள் சிறு சிறு கூட்டங்களாக வாழ்ந்த நாடோடிகள். பெரும் பாலோர் பாலைவனக் கொள்ளையராகத் திரிந்தனர். இவர்கள் மான உணர்ச்சி மிக்கவர்கள் ; பிறர் இகழ்ந்து கூறும் சிறு சொல்லேயும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இதல்ை அடிக்கடி ஒரு கூட்டத்தாரோடு மற்ருெரு கூட்டத்தார் போரிட்டுப் படுகொலைக்குள்ளாவர். நாடோடிகளாகத் திரிந்த இந்நாகரிகமற்ற மக்கள் கி. பி. ஏழாம் நூற்ருண்டில் நாடாளும் மன்னர்களாக மாறித் தங்கள் போர் வன் மையாலும் கலைப் பண்பாலும் உலகத்தையே வியப் பிலாழ்த்தினர்.

шт. 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/50&oldid=595599" இலிருந்து மீள்விக்கப்பட்டது