பக்கம்:பாரும் போரும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இவர்களை இந்நிலைக்கு உயர்த்திய பெருமை இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்த பெரியார் முகம் மது நபியையே சாரும். ஒருவரோடொருவர் சண்டையிட்டு ஒற்றுமையற்று அறியாமை இருளில் மூழ்கி வாழ்ந்த மக்களிடத்தில் முதலில் இவருடைய கொள்கைக்கு வரவேற்புக் கிடைக்கவில்லை. இவர் தாம் வாழ்ந்த ஊரான மக்காவிலிருந்து, கல்லால் அடித்துத் துரத்தப்பட்டார். ஆல்ை தன்னம் பிக்கை மிக்கவரான நபி, அராபிய மக்கள் உள்ளத் தில் அசையாத நம்பிக்கையை ஊட்டி, அவர்களை ஒரு மாபெரும் சக்தியாக மாற்றினர். காட்டு வாழ்க்கை வாழ்ந்த அம்மக்கள், அக்காலத்தவர் அறிந்திருந்த உலகில் பாதியை வென்று, கொடி கட்டி ஆண்டனர். அவர்கள் மேற்கொண்ட இஸ் லாம் மதம் அவர்களுடைய உள்ளத்தில் ஒற்றுமை யையும் பொதுமை உணர்ச்சியையும் வேர்கொள்ளு மாறு செய்துவிட்டது.

சென்ற பக்கமெல்லாம் வெற்றி அராபியரைப் பல்லாண்டு பாடி வரவேற்றது. நபி நாயகம் இறந்து இருபத்தைந்து ஆண்டுகள் கழிவதற்குள் ளாக அராபியர் கீழ்த்திசையில் பாரசீகம், சிரியா, ஆர்மீனியா, மத்திய ஆசியாவின் பெரும்பகுதி ஆகி யவற்றையும் ஆப்பிரிக்காவின் வட பகுதியையும் எளிதில் வென்றனர்; கிழக்கில் மீண்டும் முன்னேறிச் சென்று, ஈரட், காபூல், பால்க் முதலிய பகுதிகளே வென்று சிந்து நதிவரையில் சென்றனர். அரா பியப் படைத்தலைவன் உக்பா தன் ஆட்பெரும் படையோடு ஆப்பிரிக்காவைக் கடந்து, அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/51&oldid=595601" இலிருந்து மீள்விக்கப்பட்டது