பக்கம்:பாரும் போரும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5篮

களைக் கிரேக்கர்கள் என்று குறிப்பிடுவதைவிட கிரேக்கப் பண்பும் காட்டுமிராண்டிப் பண்பும் ஒருங்கே கொண்ட முரட்டுக் கூட்டத்தார் என்று கூறுவதே பொருந்தும். அலெக்சாந்தரின் வெற்றிக் கும், புகழுக்கும் அவனே முழுக் காரணம் என்று கூறிவிட முடியாது. அவன் தந்தையான பிலிப்பும் ஒரு முக்கியக் காரணம் என்று கூறவேண்டும். பிலிப் சாகும்போது, சிறந்த அரசியல் அமைப்போடு கூடிய ஒரு பெரு நாட்டையும், கட்டுப்பாடும் போர்ப்பயிற்சியும் பெருவலியும் ஒருங்கே அ மையப் பெற்ற காலாட் படையையும், கண்டோர் அஞ்சத் தக்க கப்பற் படையையும், அளவற்ற பொற்குவை யும், மணிக்குவையும் நிறைந்த ஒரு பெருங் கரு வூலத்தையும் விட்டுச் சென்றிருந்தான். தன் தந்தை அமைத்துக் கொடுத்திருந்த இச்சிறந்த அடிப்படை யின் மேல்தான் அலெக்சாந்தர் தன் பேரரசு மாளி கையை நிறுவின்ை.

tomsdosir g|Glsoésirégio (Alexander the Great) என்று வரலாற்ருசிரியர்களால் இவன் சிறப்பாக அழைக்கப்படுகிருன். மாவீரன் என்ற இப்பட்டப் பெயர் உலகில் வேறு எந்த வீரனுக்கும் கிட்டாமல் இவனுக்கே வாய்த்த ஒரு தனிப் பெருமை யுடையது. பட்டமேறியபோது இவனுக்கு வயது இருபது ; கண்டோர் விரும்பும் கட்டழகும், தன் தந்தையைப்போல் உரம் பெற்ற உடற்கட்டும், அஞ்சாமையும் வாய்க்கப் பெற்றவன். அக்காலத் தில் கிரேக்க நாட்டிலேயே தலை சிறந்த அறிஞகை விளங்கிய அரித்தாத்தல் (Aristotle) என்பவரிடத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/58&oldid=595615" இலிருந்து மீள்விக்கப்பட்டது