பக்கம்:பாரும் போரும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

தில் கல்வி பயின்றதால் இவன் இலக்கியத்திலும், கிரேக்கப் பண்பாட்டிலும் பேரார்வம் கொண்டு விளங்கின்ை ; பட்டமேறியதும் முதன் முதலாக கிரேக்க நாடு முழுவதையும் தன் ஆட்சியில் கொணர விரும்பின்ை. அதற்கு இடையூருக விளங்கிய தீப்ஸ் என்ற கிரேக்க நகரை வேரும் வேரடி மண்ணுமில்லாமல் அழித்தொழித்தான்; ஆயிரக் கணக்கான மக்களைப் படுகொலை செய் தான்; பல்லாயிரவரை அடிமைகளாக விற்றன்; இங்ங்ஸ்ம் கிரீசைத் தன் கொடுஞ் செயலால் நடுங்க வைத்த:ன்.

பார் சீகரும் கிரேக்கரும் பரம்பரைப் பகைவர்கள். எனவே அலெக்சாந்தரின் அணிவகுப்பு பாரசீகத்தை நோக்கி விரைந்தது. இ வ. ன் பாரசீகப் பேரரசன் மூன்ரும் டேரியசை இரு முறை முறியடித்தான்; டேரி யசின் முன்னுேனை செர்க்சிஸ் கிரேக்க நாட்டில் ஏதென்ஸ் நகரைக் கொளுத்தியதற்குப் பழி வாங்க டேரியசின் அரண்மனையைத் தீயிட்டு அழித்தான் ; அதோடு டேரியசின் மகளையும் மனைவியாக்கிக் கொண்டான். ஆ யி ர ம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த பாரசீகக் கவி பிர்தெளசி இயற்றிய ஷாகாமா என்ற இலக்கியத்தில், அலெக்சாந்தருக்கும் டேரிய சுக்கும் நடந்த போர் க்ற்பனை நயத்தோடு வருணிக் கப்படுகிறது.

சிற்ருசியா, சிரியா, எகிப்து, ஆப்கானிஸ்தானம் முதலிய நாடுகளையும், பாரசீகப் பேரரசில் அடங்கி யிருந்த நடுஆசிய நாடுகளையும் அலெக்சாந்தர் வென் ருன்; வடமேற்குக் கணவாய்களின் வழியாகச் சிந்து நதிப் பள்ளத்தாக்கை அடைந்தான். புருடோத்தமன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/59&oldid=595616" இலிருந்து மீள்விக்கப்பட்டது