பக்கம்:பாரும் போரும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

வந்தனர். உரோம அரசு நிலை பெறவேண்டுமானல் காலியா நாட்டையும் வென்று, உரோமாபுரி ஆட்சி யின் கீழ்க்கொண்டு வரவேண்டு மென்பதைச் சீசர் உணர்ந்தான் ; மக்கள் மன்றத்தின் இசைவு பெற்று, ஒருபெரும் படையோடு காலியாவை நோக்கிப் புறப் பட்டான்; அங்கு வாழ்ந்த பல திறப்பட்ட முரட்டுக் கூட்டத்தாரையும் வென்று, காலியா நாடு முழுவதை யும் தன்னடிப்படுத்தின்ை; அதோடு ஜெர்மானியப் பேரரசனையும் வென்று, ஜெர்மனி நாட்டை உரோ மப் பேரரசின் வட எல்லையாக்கின்ை. காலியா நாட்டில் அமைதியையும் செழிப்பையும் உண்டாக் கின்ை ; வலிமையும் கட்டுப்பாடும் மிக்க ஒரு சிறந்த படையை நிறுவின்ை; தன் கப்பற் படையின் துணை கொண்டு, பிரிட்டன் மீது இருமுறை படையெடுத் தான்; அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களான கெல்ட்டு களை வென்றன்; எக்காரணம் பற்றியோ அங்கு உரோமானியரின் ஆட்சியை நிறுவவில்லை.

இவ்வாறு சீசர் சென்றவிடமெல்லாம் வெற்றிக் கொடி நாட்டிவிட்டு, காலியா நாட்டுக்குத் திரும் பினன். இதற்குள் பாம்பி என்ற ஒரு வீரன் சீசருக் குப் போட்டியாக உரோமாபுரியில் செல்வாக்குப் பெற்று மக்கள் மன்றத்தை ஆட்டிவைக்கும் ஆற்றல் பெற்றவகை விளங்கினன். சீசரின் செல்வாக்கைத் தொலைத்துவிட வேண்டும் என்ற உள்ள உறுதி யோடு, சீசருக்கு விரோதமான சில சட்டங்களையும் மக்கள் மன்றத்தின் துணைகொண்டு செய்திருந்தான். இதல்ை பெருஞ் சினங்கொண்ட சீசர் தன் வலிமிக்க படையோடு, உரோமாபுரி நோக்கி இரை வேட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/64&oldid=595627" இலிருந்து மீள்விக்கப்பட்டது