பக்கம்:பாரும் போரும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 புலிபோல் கிளம்பின்ை ; இத்தாலியின் எல்லேயி லிருந்த இரவென்ன நகரத்தில் பாடி வீடு அமைத் துத் தங்கின்ை. அப்பாசறையில் தன் வீரர்களை நோக்கி, பேரும் புகழும் மிக்க உரோம நாட்டுப் போர் வீரர்களே ! மாற்ருரும் போற்றும் மாண்புமிக்க மறவர்களே! ஏழை மக்களின் உழைப்பைத் தங்கள் இன்பவாழ்வின் பீடமாக அமைத்து வெறியாட்ட மாடும் செல்வர்களும், தன்னலமே உருவான பாம்பி யும் என்னை அழித்தொழிக்கப் போர் முரசு முழங்குகின்றனர். உரோமாபுரியின் பண்டைப் பெருமையையும் புகழையும் நிலைநாட்டத் தகுதியும் ஆற்றலும் உடையவன் யாரென்பதை நீங்கள் அறி வீர்கள். இப்போரில் நாம் தோல்வியடைந்தால் அது இணையற்ற வீரர்களாகிய உங்களுக்கும், நாம் உயிரினும் மேலாகப் போற்றும் குடியாட்சிக்கும் சாவுமணியாகும். எனவே தந்நலக்காரரின் பேரா சையைத் தொலைத்து, உரோமாபுரியின் தாளில் பூட் டப்பட்டுள்ள விலங்குகளைத் தகர்த்தெறிவது நம் கடமையாகும்' என்று உணர்ச்சிமிக்க வீரமொழிகள் புகன்ருன். கொல்லும் வேங்கை முன் புள்ளிமான் நிற்குமா ? காட்டுத் தீ முன் காய்ந்த சருகு எம்மாத் திரம்? வெங்கட் சுருவை மீன் எதிர்க்க முடியுமா? பாம்பியின் படை சூறைக் காற்றில் பட்ட இலவம் பஞ்சுபோல் இடம் தெரியாமல் பறந்தோடி விட்டது. பாம்பி கப்பலேறிக் கிரீசுக்கு ஓடிவிட்டான். சீசர் ஏறு நடையோடு உரோமாபுரி வீதியை வலம் வந் தான். மக்கள் கடலெனச் சூழ்ந்து, "உரோமாபுரி யின் தந்தை சீசர் வாழ்க!' என்று வாழ்த்தினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/65&oldid=820524" இலிருந்து மீள்விக்கப்பட்டது