பக்கம்:பாரும் போரும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 உரோமநாட்டுப் படையைத் துரத்திவிட்டுத் தனி யாட்சி நடத்தத் தொடங்கின்ை. இதை உணர்ந்த சீசர் சீலா என்ற விடத்தில் அவனை முறியடித்துப் பெரு வெற்றிபெற்ருன். இந்தச் சீலாப்போர் வரலாற் றுப் புகழ் பெற்றதாகும். இவ்வெற்றியைச் சீசர் உரோமநாட்டு மக்கள் மன்றத்துக்குத் தெரிவித்த முறை இன்றும் புகழ்பெற்றதாகும். இதைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, 'வந்தேன்; கண்டேன் ; வென்றேன் என்று செய்தியனுப்பின்ை. இதல்ை இவன் நுண்ணறிவு புலப்படும். இறுதியாக இவன் வட ஆப்பிரிக்காவிலும், ஸ்பெயினிலும் நடந்த கிளர்ச்சிகளை வெற்றிகரமாக வென்றடக்கின்ை. இவ்வாறு மாற்ருரின் வலி தொலைத்து, யாவராலும் வெல்லுதற்கரிய இமயமாய் உரோமாபுரியில் சீசர் வீற்றிருந்தான். சீசரின் செல்வாக்கும், பெருமையும் மேன்மே லும் வளர்வதைக் கண்ட பிரபுக்கள், பெரும் அழுக் காறு கொண்டனர். அவர்களில் தலைசிறந்தவன் காசியசு என்பவன். சீசரின் அன்பையும் நன்மதிப் பையும் பெற்று விளங்கிய பெருமகன் புரூதசின் உள்ளத்தையும் கெடுத்து, அவனையும் தன்பக்கம் சேர்த்துக் கொண்டான் காசியசு. ஒரு நாள் சீசர் மக்கள் மன்றத்துக்குச் செல்லும்போது இக்கெடு மதியாளரால் படுகொலை செய்யப்பட்டான். சீசருக்கும் உலகில் தோன்றிய மற்றைய மாவீரர்களுக்கும் நிறைந்த வேறுபாடுண்டு. மற்ற வீரர்கள் பெற்றிருந்த எல்லாப் பண்புகளையும் சீசர் பெற்றிருந்தான். ஆல்ை அவர்கள் கனவிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/68&oldid=820527" இலிருந்து மீள்விக்கப்பட்டது