பக்கம்:பாரும் போரும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கருதமுடியாத சில அரும் பண்புகளும் ஆற்றல் களும் சீசரிடத்தில் அமையப் பெற்றிருந்தன. மற்ற வர்கள் படைசெலுத்துவதில் வல்லவர்கள். ஆனல் சீசர் படையோடு ஆட்சி செலுத்துவதிலும் வல்ல வன். அக்காலத்திலேயே இவன் உரோம நாட்டின் எல்லா நகர்களிலும் நகராட்சி மன்றங்களை (Municipality) நிறுவினன்; நாட்டைப் பல மண்டலங் களாகப் பிரித்து, மண்டலத் தலைவர்களே அமர்த்தி ன்ை; உரோமப் பேரரசில் அடங்கியிருந்த எல்லா நாட்டினர்க்கும் குடியுரிமை (Citizen right) அளித்திருந்தான். - சீசர் கொடைத்திறன் மிக்கவன். ஏழைகட்கு இல்லையென்னது வழங்கும் வள்ளல். இவன் செல் வக்குடியில் பிறந்திருந்தாலும், ஏழைகட்கு உணவுத் தானியங்களைத் திங்கள்தோறும் தவருமல் வழங்க ஆணையிட்டிருந்தான்; தன் இறப்பிற்குப்பின் விட் டுச் சென்ற இறுதி முறி (Will)யில் தன் செல்வத் திலிருந்து ஒவ்வோர் உரோமானியனுக்கும் மூன்று பொன் நாணயங்கட்குக் குறையாமல் ஈந்து மகிழ் விக்க வேண்டுமென்று எழுதியிருந்தான்; தன் விளை நிலங்களையும் தைபர் நதிக்கரையில் தனக்குச் சொந்தமாயிருந்த பூங்காவையும் பொதுமக்கட்கு உரிமையாக்குமாறு குறிப்பிட்டிருந்தான். "செத்துங் கொடை கொடுத்தான் சீசர்' என்று எல்லோரும் பாராட்டினர். சீசர் வகுத்த ஆண்டுக் குறிப்பேடு (Calendar) அவன் நுண்ணறிவுக்குச் சிறந்த எடுத்துக் காட்டாம். பழங்கால உரோமாபுரியின் ஆண்டுக் குறிப்பேட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/69&oldid=820528" இலிருந்து மீள்விக்கப்பட்டது