பக்கம்:பாரும் போரும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நெப்போலியன் தன் பதினரும் அகவையி லேயே துணைப்படைத் தலைவனுக நியமிக்கப்பட் டான். அக்காலத்தில்தான் புகழ் மிக்க பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றது. மக்கள் கொதித்தெழுந்து, கொடுமை புரிந்துவந்த செல்வர்களையும், பெருநிலக் கிழார்களையும் கொன்று குவித்தனர். அவர்களைக் கொல்வதற்கென்றே கில்லடின் (Gillotine) என்ற கொலைப் பொறி செய்யப்பட்டது. அரசனும் அவன் குடும்பத்தாரும் அதில் பலியிடப்பட்டனர். இறந்த வர் போக எஞ்சி இருந்த செல்வர்களும் நிலக் கிழார்களும் இங்கிலாந்து போன்ற அண்டை நாடு களுக்கு ஓடி ஒளிந்தனர். இப்புரட்சியைக் கண்ட மற்ற ஐரோப்பியர்கள், தங்கள் நாட்டிலும் எங்கு இத்தீ பரவிவிடுமோ என்று அஞ்சி நடுங்கினர். பிரெஞ்சுக் குடியரசை ஒடுக்க, இங்கிலாந்து பிரான் சின் மேல் போர் தொடுத்தது. வலி மிக்க ஆங்கிலப் பெரும் படையை, தவுலன் துறைமுகத்தில் நெப்போ லியன் முறியடித்தான் ; உடனே பீரங்கிப் படைத் தலைவனுக உயர்த்தப்பட்டான்; உள் நாட்டுப் போரில் நாற்பதாயிரம் மக்கள் கொண்ட படையைத் தன் சிறு பீரங்கிப் படையால் சிதறடித்தான். பாரிசு நகரத்தில் கலகங்களைத் தடுப்பதன் பொரு ட்டு, எல்லாரிடமும் இருந்த படைக் கருவிகளையும் கைப்பற்றுமாறு நெப்போலியன் ஆணையிட்டான். அவ்வூரில் ஜோசப்பைன் என்ற அழகிய கைம்பெண் வாழ்ந்து வந்தாள். அவளுடைய கணவன் புரட் சிக்காரரால் கொல்லப்பட்டான். அவள் வீட்டி லிருந்த வாளும் நெப்போலியன் ஆட்களால் ைக ப் பற்ற ப் பட்ட து. அவ்வாளைத் திருப்பிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/79&oldid=820538" இலிருந்து மீள்விக்கப்பட்டது