பக்கம்:பாரும் போரும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 படுதோல்வியடையும்படி செய்து விட்டது. ஆனல் நெப்போலியன் உள்ளம் தளரவில்லை. இதற்குள் ளாக இதாலியில் இருந்த பிரெஞ்சுப் படை துரத்தப் பட்டதாகவும், மற்ற வல்லரசுகள் பிரான்சின்மேல் போர்தொடுக்க முயற்சிப்பதாகவும் செய்தி கிட்டியது. உடனே நெப்போலியன் பிரெஞ்சு நாடு நோக்கிப் புறப்பட்டான். இவன் பிரான்சை அடைந்த பொழுது, உள்நாட்டுக்குழப்பம் மிகுந்திருந்தது. நெப் போலியன் சென்ற வழியில் அவனைக் கொல்வதற்கு வெடிகுண்டும் வைக்கப்பட்டது. ஆல்ை, அவன் குழப்பக்காரரை அடக்கி, நாட்டில் அமைதியான ஆட்சி நிலைபெறுமாறு செய்தான். இச்சமயத்தில் ஆங்கிலேயர் எகிப்தைத் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டனர். நெப்போலியன் ஆங்கிலேயருக்கு நல்ல பாடம் கற்பிக்க எண்ணித் தக்க ஆயத்தத் தோடு ஆங்கில நாட்டின் மேல் போர்தொடுக்க முனைந்தான். அப்போது ஆங்கில நாடு பஞ்சத்தா லும் பட்டினியாலும் வாடியிருந்ததால், போரை விடுத்து அமைதியை விரும்பியது. எகிப்தையும் மால்ட்டாவையும் திருப்பிக் கொடுக்க இசைந்தது. இவ்வாறு இரு நாடுகளும் இகல் நீங்கி நட்புறவு கொண்டன. ஆல்ை இந்நட்பு நீண்ட நாள் நீடிக்கவில்லை. நெப்போலியன் மீண்டும் இங்கிலாந்தின்மேல் போர் தொடுக்க முந்நூருயிரம் வீரர்களையும்,இரண்டாயிரம் பீரங்கிப் படகுகளையும் திரட்டினன். போலோன் என்ற இடத்தில் பாசறை அமைத்துத் தங்கியிருந் தான். நெப்போலியனின் வளர்ச்சியையும் செல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/81&oldid=820540" இலிருந்து மீள்விக்கப்பட்டது