பக்கம்:பாலும் பாவையும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 நின்றான். ஆனால் அகல்யா நிற்கவில்லை. அவள் தன்னை மறந்து, தன்னுடைய நிலையை மறந்து, மேலே மேலே மேலே நடந்து கொண்டே இருந்தாள் 'அகல்யா..!" 'அகல்யா ..!” பார்த்தாள். “எங்கே போகிறாய்? இதுதான் என்னுடைய வீடு' என்றான் கனகலிங்கம் சிரித்துக்கொண்டே. அந்த வீடு பூட்டிக்கிடந்தது! ' இ து த ன ? - இ ேத ா வந்துவிட்டேன்!” என்றாள் அவள் “நல்ல வேளை, வேறு யாருடைய கண்ணிலும்படாமல் எப்படியோ தப்பி வந்து சேர்ந்துவிட்டோம்!” என்று சொல்லிக்கொண்டே கனகலிங்கம் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான். அவனுடைய சந்தோஷம் அற்ப சந்தோஷமாயிற்று அதே சமயத்தில், “ஏண்டா வேறு யாருடைய கண்ணிலாவது பட்டால் என்னவாம்!” என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்து சேர்ந்தான் அவனுடைய நண்பன் ராதாமணி இவன் யார்? என்பதுபோல் அவனைப பார்த்தாள் அகல்யா, 'இவள் யார்? என்பதுபோல் அவளைப் பார்த்தான் ராதாமன்னி. ஆனால் கனகலிங்கத்தை ஒருவாறு உணர்ந்தவனாதலால் அவசரப்பட்டு எந்த விதமான விபரீத முடிவுக்கும் அவன் உடனே வந்துவிடவில்லை கனக லிங் கம், அ. க ல் யாவோடு அவனை யும் அழைத்துக் கொண்டு மேலே சென்றான். “கீழே ஏன் பூட்டிக்கிடக்கிறது?’ என்று கேட்டான் ராதாமணி