பக்கம்:பாலும் பாவையும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 “கொஞ்சம் கொஞ்சம் வாங்கிக்கொள்வதற்குக் காதலே போதும் என்கிறாயா?” "நாசமாய்ப் போச்சு!-எல்லாவற்றுக்கும் காசு வேண்டும், காசு வேண்டும் என்றுதான் நான் முட்டிக்கொள்கிறேனே!” "அப்படியானால் சரி!-இந்தா, இந்தப் பதினைந்து ரூபாயை நீயே வைத்துக்கொள்; வாங்க வேண்டியதை யெல்லாம் நீயே வாங்கிக்கொள், என்று கனகலிங்கம் பதினைந்து ரூபாயை எடுத்து அவளுக்கு முன்னால் வைத்தான் “இது போதுமா, என்ன?” என்றாள் அகல்யா. “போதும் போதாதற்குத்தான் நம்முடைய சிரஞ்சீவிக் காதல் இருக்கவே இருக்கிறதே!” என்றான் அவன் அகல் யாவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை; “நான் உங்களுடன் இனிமேல் பேசினால் கேளுங்கள்!” என்று சொல்லிவிட்டு, அவள் அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் மேலே சென்றுவிட்டாள் அதே சமயத்தில், மத்தியானம் சாப்பாடு வந்து சேர்ந்ததா?” என்று விசாரித்துக்கொண்டே அவனுக்கு எதிரில் வந்து உட்கார்ந்தான் ராதாமணி. “சேராமலென்ன?-கீதாதான் கொண்டு வந்திருந்தாள்” என்றான் கனகலிங்கம். “நல்ல வேளை, வேறு யாரும் கொண்டு வரவில்லையேரொம்ப சந்தோஷம்!” "ஏன் என்ன நடந்தது?" “ஒன்றும் நடக்கவில்லை, அம்மாவிடம் நீ யாரோ ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு வந்திருக்கிறாய் என்று சொல்ல என்னவோ போலிருந்தது-அதைப் பற்றி அம்மா ஏதாவது வித்தியாசமாக நினைத்துக் கொண்டு விட்டால் என்ன செய்வது?-அதனால் யாரோ ஒரு நண்பனை நீ அழைத்துக் கொண்டு வந்திருப்பதாக நான் சொல்லியிருந்தேன். அது பொய்யாகிவிடக் கூடாதே என்ற கவலை எனக்கு!”